தேவேந்திரன் ......9
தேவர் தலைவ!திசைமலி புகழும்,
தேனூ ரமுதமும்,திறனுடை யானையும்,
தேடிவரு செல்வமும்,தேவிஇந் திராணியும்,
தேவ மகளிரும் தொழுதிடும் இந்திர!
சேவலம் கொடியோன் சேர்மயில் சீர்மை:
மேவிடும் வச்சிரம் முனியருள் கூர்மை:
ஆவலால் ஆயிரம் கண்களாய் ஆனாலும்,
ஆவிதரு ஹவிஸ்முதல் பெற்றிடும் இந்திர!
காவினில் மலரும் கறையிலாப் பாரிஜாதம்,
காவி முனிவர் கமண்டலத் தீர்த்தம்
காலம் வழங்கிய குறையா நிதியம்:
காலம் காலமாய்காக்கும் காவல!
பூவும் கனியும் பூத்துக் குலுங்கும்,
பாவலர் பாட்டும் குவியும்:பொன்னூர்
பாகம் பிரியாள் கல்யாணிப் பைந்தமிழ்ப்
பாவை போற்றிப் பணிவுடன் புரக்கவே.
பொருள்
தேவர்களின் தலைவனே!உலகளாவிய புகழுடையவனே!அமுதமும்,ஐராவதமும்,செல்வா வளங்களும்,
இந்திராணியும் போற்றித் தொழுகின்ற இந்திரனே!
போர்க்களத்தில் முருகப் பெருமானுக்கு,மயில் ஊர்தியாய் விளங்கியது உன் சிறப்பு.போரிலே
நீ அரக்கர்களை வெல்ல முனிவன் தன் முதுகுத் தண்டை வச்சிராயுதமாக வழங்கியது பெருமை.
ஆசை மேலீட்டால் உன் உடல் முழுவதும் கண்களானாலும்,ஆயிரம் கண்ணான் "எனப் பெயர்
பெற்றாலும்,வேள்வியில் முதல் ஹவிர்பாகம் நீயே பெறுவது சிறப்பு.
உனது தோட்டத்தில் குற்றமற்ற பாரிஜாத மலர்:உன்னை ஆசீர்வதிப்பது முனிவர்களின் புண்ணியக்
கமண்டல நன்னீர்:நீஆள்வது சங்க,பதும நிதியன்கள்:இவைகளைக் கோடான கோடி ஆண்டுகளாய்
அனுபவிக்கும் இந்திரனே!
செடியெல்லாம் மலர்கள்:மரம்,கொடியெல்லாம் கனிகள்:தெருவெங்கும் தமிழ்ப்பாடல் முழக்கம்:
இப்படிப்பட்ட கன்னியாகுடி என்னும் பொன்னூரில் கோயில் கொண்டுள்ள கல்யாணி அம்மை என்னும்
பைந்தமிழ்ப் பேரரசியைப் போற்றிக் காப்பாய் இந்திரா!(இறைவன் பாதியுடலைப் பெற்று விளங்கும்
கல்யாணி அம்மை மீது பாடப்படும் பைந்தமிழ்,பிள்ளைத் தமிழ் நூலைப் போற்றிக் காப்பாய் )எனவும்
பொருள் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக