செங்கீரைப்பருவம்.......8
தமிழ்மகன் தவழ்மகன் சரவணம் வளர்ந்திடும்
தளிர்மகன் தனைக்கண்டு
தமிழ்ச்சுவை தருவமிழ் தினையூட்டி, தவத்திறன்
தனையருள் மலைமகளே!
கமழ்கழு மலக்குளக் கரையழு கவுணியன்
கலைவளர் கண்ணோக்கு
அமிழ்தமாம் அருமுலை அகம்பொழி ஞானப்பால்
அளித்தருள் அறிவரசி!
உமிழ்சுடு நெருப்பினில் உனையழை பட்டருக்கு,
உதிநிலா கருப்புநாள்
குமிழ்குழை தனையெறி குளிர்கர அபயமாம்
குணமுடை அபிராமி!
சுமைவினை தனைகளை சிவமனை கல்யாணி!
செங்கீரை ஆடியருள்.
சுமையுணர் சிவப்பணி அமைபதி தலைமகளே!
செங்கீரை ஆடியருள்.
பொருள்
சரவணத்தில் வளரும் இளந்தளிர் முருகனைக் காணத் தந்தையாம் சிவனும்,தாயாம் பார்வதியும்
வருகின்றனர்.அவனது அழகை,அறிவைக் கண்டு வியந்த தாய்,இருகரம் நீட்டி அருகில் வா"என
அழைத்து,அணைத்து அன்புடன் அமுதப்பால் ஊட்டுகிறாள்.அமுதம் வழியே ஞானம் ஊட்டிய
மலைமகளே கல்யாணி!
சீர்காழிக் குளக்கரையில் தன்னை அழைத்துவந்த தந்தை நீரில் மூழ்கி இருக்க,அவரைக்காணாது
அழுதபடி நின்று கொண்டிருக்கும் கவுணிய குலத்துதித்த ஞானசமபந்தருக்கு,இறைவன் ஆணை
மேற்கொண்டு அமுதப்பால் அளிக்கிறாள் அன்னை.அக்குழந்தையின் கலைமிகு தேவாரப் பண்ணொலி உலகெலாம் முழங்க ஞானப்பால் அளித்த ஞானாம்பிகையே!கல்யாணி!
அம்மையைத் தொழுதுகொண்டிருந்த அபிராமி பட்டர் அமாவாசை அன்று மன்னன் கேள்விக்கு,இன்று நிலவு உதிக்கும்"எனக் கூறினார்.அம்மை மட்டுமே அவர் நினைவு.நாள்,நக்ஷத்திரம்,
பெரியவர்,சிறியவர் என எதுவும் அவர் மனத்தே தோன்றாது.அம்மையின் ஒளி முகம் மட்டுமே
அவரின் மனத்தில் தெரியும்.சினம் கொண்ட மன்னன் நெருப்பு சூழ்ந்த கம்பத்தில் அவரைக் கட்டிப்போட்டு,இன்று மாலை நிலவு தன்ர வேண்டும்.இல்லையெனில் இவரைத் தீயில் தள்ளுக "என்கிறான்.அம்மையை நினைந்து பட்டர் அந்தாதி பாடுகிறார்.அம்மை தன்காதுத் தோட்டை
நிலவாக வானில் ஒளிர்க்க விடுகிறாள்.பட்டரைக் காத்த அபிராமியே!கல்யாணி!
பாவச்சுமைகளைக் களைந்து அருள்புரியும் கைலாச நாதரின் துணைவியே!கல்யாணி அம்மையே!செங்கீரை ஆடி அருள்வாய்.
சுமையை (பாவத்தை)உணர்ந்து,அதனைத் தவிர்த்து,நல்வழியாம் சிவப்பணி ஆற்றும் கன்னியாகுடியில் எழுந்தருளி ஆட்கொள்ளும் கல்யாணி அம்மையே!செங்கீரை ஆடி அருள்க.
விளக்கம்
கமழ்கழுமலம் ...........வினைத்தொகை .கழுமலம்=சீர்காழி என்னும் ஊர்
கருப்பு நாள்= அமாவாசை நாள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக