செங்கீரைப்பருவம்......7
விரிமலர் விழுமது கரமுணு நறுந்தேனே!
வியன்வயல் முளரியே!
விழாவினில் இசைத்திடும் வியன்குழல் நல்லிசையே!
விதிதனைப் படைப்பவளே!
கரிமலை களிலெடு கலைமிகு இரத்தினமே!
கவிபுகழ் காவியமே!
கறைவிடம் கழுத்ததில் கரங்களால் தடுத்தவளே!
கலியுகம் காப்பவளே!
எரிசுடர்ப் பொடியணி இறைவனின் எழிலுடல்
இணைந்ததால் உயர்ந்தவளே!
எருமையன் எதிர்வர இகல்வெறிச் சினமுடன்
இராக்கதன் அழித்தவளே!
அரிஅயன் அரனென முதுதொழில் கல்யாணி!
செங்கோ!செங்கீரை.
அறிசிவப் பணிப்பதி தனிலுறை கல்யாணி!
செங்கோ! செங்கீரை.
பொருள்
இதழ்களை விரிக்கும் மலருள் அமர்ந்து வண்டுகள் உண்ணும் தேன் போன்றவளே!செழுமையான
வயலில் மலர்ந்த தாமரைபோல் குளிர்ந்தவளே!விழாக்களில் இசைக்கப்படும் வீணை,குழல் போன்ற
இசைக்கருவிகள் இசைக்கும் நல்லிசை போன்றவளே!மூவேழ் உலகையும் விதிப்படிப் படைப்பவளே!
யானைபோன்ற மலைகளில் வெட்டி எடுக்கப் படும் முத்தே!(யானையின் மத்தக முத்தே!மலையில் எடுக்கப்படும் முத்தே!எனவும் பொருள் கொள்ளலாம்.)காளிதாசனும்,அபிராமி பட்டரும்,இன்னும்
பற்பலக் கவிஞர்கள் போற்றும் காப்பியமே!ஆலகால நஞ்சினை உண்டு உலகைக் காக்க இறைவன்
முயலும் பொழுது,கணவனாம் சிவன் பேருயிரைக் காக்கத் தன் கையால் கழுத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு நஞ்சு உடலுள் செல்லாமல் தடுத்து நிறுத்தியவளே!(சிவனும் காக்கப்பட்டார்.அவருக்கு நீலகண்டன் எனப்பெயரும் வந்தது.) கலியுகத்தில் மூவேழ் உலகங்களையும் காப்பவளே!
சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக்கொள்பவனாம் சிவனின் உடலில் பாதியைப் பெற்றவளே!அதனால்
உலகோர் சிவனை "அர்த்த நாரீஸ்வரன் எனப்போற்றும் அளவு சிறப்பினைப் பெற்றவளே!மகிஷாசுரன்
போராற்றப்போர்க்களத்தில் எதிரில் வர,வெறியோடு,வெகுண்டு,தனது கரங்களால் அவனை
அழித்தவளே!
பிரமனைப்போல் படைத்தலையும்,திருமால்போல் காத்தலையும்,சிவன்போல் அழித்தலையும்
மேற்கொண்டு முத்தொழில் ஆற்றும் கல்யாணி அம்மையே!செங்கீரை ஆடுவாய்.
சிவனை அறியும் தவத்தில் ஈடுபடும் கன்னியாகுடியில் எழுந்தருளி அருளும் கல்யாணி அம்மையே!
செங்கீரை ஆடி அருள்வாய்.
விளக்கம்
கரிமலை ......கரியும் மலையும் எனப் பொருள்கொள்ளின் ...உம்மைத்தொகை
கரி போன்ற மலை எனின் உவமைத்தொகை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக