செங்கீரைப்பருவம்......5
ஆடலில் ஆனந்தக் கூத்தன் நிகரானாய்:
ஆடலில் அருளும் அவன்செயல் அருகுற்றாய்:
ஆடற் கலைகள் அனைத்தும் ஆனாய்நீ:
ஆடிடும் அகிலத்து ஆடா நிலைநீயே:
பாடலில் உருகிப் பைம்பெண் உருவெடுத்தாய்:
பாடலைப் பாடிடப் பைம்பால் ஊட்டினாய்:
பாடலால் செவியணி பைந்நிலவாய் மாற்றினாய்:
பாடலைக் கேட்டிடவே பைங்கோயில் வந்தமர்ந்தாய்.
கூடல் பாண்டியன் குணமகளாய்ப் பேர்பெற்றாய்:
கூடல் அரசியாய்க் கடும்போர் தொடங்கினாய்:
கூடலின் கோமகள் கைலைமுன் நாணுற்றாய்:
கூடலாய் நிறைவுற்றுக் குலக்கன்னி தானுற்றாய்:
தேடற் கரியவன் திகழ்கன்னிக் கைலாசன்
நாடிய நலமகளே!செங்கீரை ஆடியருள்.
பாடற் பொருளாய்ப் பாடலின் கருத்தாய்க்
கூடிய குலமகளே!செங்கீரை ஆடியருள்.
பொருள்
நடராசப் பெருமகனோடு போட்டியிட்டு ஆடும் உயர்வு பெற்றவளே!திருவிளையாடல் புரியும்
ஈசனோடு அருள்புரிவதில் பங்கு பெறுபவளே!ஆடல் கலைகள் அனைத்தும் உனக்குள் அடக்கமன்றோ!
நிலையில்லா உலகினில் நிலைத்து விளங்குபவள் நீயே அல்லவா!
குமரகுருபரரின் பாடலில் மனமுருகிச் சிறு பெண் உருவெடுத்தாய்:திருஞான சமபந்தரின் தேவாரப்
பாடலைக் கேட்பதற்காக,குழந்தையாய் அழுத அவருக்கு ஞானப் பால் ஊட்டினாய்:பாடல் பாடிய
அபிராமி பட்டருக்காகத் தன் காதுத் தோட்டை நிலவாக மாற்றினாய்:குமரகுருபரரின் பாடலைக்
கேட்கத் திருமலை மன்னர் மடியில் சிறுபெண்ணாய் வந்தமர்ந்தவளே!
மதுரைப் பாண்டியன் மகளாக உதித்தவளே!நாடெங்கும் சுற்றிப் பெரும்போர் புரிந்தவளே!போரிலே எதிர்த்த இறைவனாம் சுந்தரரைக் கண்டு நாணமுற்று அவரையே மணந்தவளே!மதுரைபோல் விளங்கும் ஊரான கன்னியாகுடியில் நிறைவுடன் வீற்றிருப்பவளே!
தேடலுக்கு அகப்படாத ஈசன்,கன்னியாகுடியின் கைலாசநாதர் நாடிவந்த கல்யாணி அம்மையே!
செங்கீரை ஆடி அருள்வாய்.
பாடலும் நீ.பாடற்பொருளும் நீ.பாடற்கருத்தும் நீ.அனைத்துமான கல்யாணி அம்மையே!செங்கீரை
ஆடி அருள்வாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக