செங்கீரைப்பருவம்............4
மதுவளர் மலரிவை எனமகிழ் பணிப்பெண்கள்
மனையறை மருதிலை எழுதிய அழகாட ,
மதிமுகக் கருவிழி புனைமையும் இமைத்தாட
மணியணி மூக்கினில் ஒளிக்கலை விளக்காட ,
மதுகரம் மொய்குழல் மணமுடன் விரிந்தாட ,
மயன்புனை இருசெவி மரகதம் அசைந்தாட ;
முகிழ்சிரிப் பலையொலி முலைமுகை எனவாட,
மழலையாம் மறையொலி மகேசனின் மனத்தாட,
கதுவெனக் கழுத்தினில் கனகமணிச் சரடாட,
கரமதில் கருவளை கலகல ஒலித்தாட ,
கைவிரல் ஐந்திலும் மோதிர வகையாட ,
காலணி சதங்கை தண்டை கொலுசாட
நதியணி புகழீசர் நறுந்துணை கல்யாணி!
நலமருள் நல்லூரில் செங்கீரை ஆடியருள்.
நிதியெலாம் நமசிவ எனநினை கனியூரில்
நிதியருள் நிலமகளே!செங்கீரை ஆடியருள்.
பொருள்
தேன்மொய்க்கும் வண்டுகள் சூழ்ந்த நறுமண மலர்மொட்டுக்கள் அம்மையின் மென்கரம் போற்றி,
இல்லத்தில் அறைத்த மருதாணியை அழகுற இட்டனர்,அவ்வழகு ஆட,நிலவு முகத்தில் அமைந்த கண் கருவிழியில் இட்ட மையோடு இமைகள் படபடக்க,அழகிய மூக்கில் அணிந்துள்ள வைர மூக்குத்தியின் ஒளி நின்றாட,
வண்டுகள் மொய்க்கும் கருங்கூந்தல் காற்றினிலே விரிந்தாட,பிரமன் அழகுறப் படைத்த செவியிரண்டிலும் காதணிகள் அசைந்தாட,அழகிய பற்கள் அமைந்த வாயினில் தோன்றும் புன்சிரிப்பு முல்லை மொட்டுபோல் காட்சிதர,மழலையான கல்யாணி அம்மையின் பேச்சொலி சிவபெருமானின் மனத்திலே நடனமாட,
சதைப்பற்றுள்ள கழுத்தில் மணியாரங்கள் கோத்த நூல் ஆட,கரங்களில் உள்ள வளையல்கள் ஒலித்தபடி ஆட,கைவிரல்களில் உள்ள மோதிரங்கள் வகையாய் அழகாட்டம் ஆட,காலில் அணிந்துள்ள,சதங்கை,தண்டை,கொலுசு ஆகியவைகளும் அசைந்தாட,
கங்கையைத் தலையிலே அணிந்த பரம்பொருளின் துணையாகிய கல்யாணி அம்மையே!நல்லன
தேடும் கன்னியாகுடியில் செங்கீரை ஆடி அருள்வாய்.
பொருளெல்லாம் சிவமயம் என வாழ்வோர் ஊரான கன்னியாகுடியில் அருளைச் செல்வமாய் வழங்கும் கல்யாணி அம்மையே!செங்கீரை ஆடி அருள்வாய்.
விளக்கம்
மதிமுகம்.....உவமைத்தொகை
கருவிழி........பண்புத்தொகை
முலைமுகை ...முல்லை என்பதன் தொகுத்தல் விகாரம்
நிதியருள் ....உருவகம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக