செங்கீரைப்பருவம்.......3
இமையவர் இடர்களை இலகுவேல் உருவாக
இரங்கிடும் இளைத்தவர் அருளருள
இமவான் மகளாய் மலர்ந்த இறைதுணையே!
இதந்தரு குலமுடை எழிலரசி!
உமையெனத் தவத்தினை விலக்கிடப் பெற்றோர்கள்
முனைந்திட முழுதவம் முனைந்தவளே!
சமமென,சரித்திரம் படைத்திடச் சரிபாதி
சமத்துவம் தவத்தினால் அடைந்தவளே!
அமைதியாய் அனம்வளர் அருங்கர அன்னபூரணி!
அறப்பணி மறம்தொடு துர்க்கையே!
சுமைநில வரபல அரக்கரை அழிகாளியே!
சுமை,களை கருணையில் சங்கரியே!
எமையடை எனப்பகர் இயல்பதி இருப்பவளே!
செங்கீரை ஆடி அருள்வாய்.
அமிழ்தமாய் அருள்பொழி நிறைபதிக் கல்யாணி!
செங்கீரை ஆடி அருள்வாய்.
பொருள்
அரக்கர்களின் வளர்ச்சியால் வாழ்விழந்த தேவர்கள்,அவர்களை அழிக்கும் வல்லமை பெற்ற
முருகப் பெருமானின் தோற்றம் வேண்டிச் சிவபெருமானைத் தொழுதனர்,அவர்களைக் காத்தருள,
தாக்ஷயணியை இமவான் மகளாகப் படைத்து,அம்மையை மணக்க இருந்தார்;தேவர் துயர் களைய
மலைமகளாய்த் தோன்றியவளே!தக்ஷன் மகள்"எனும் அவப்பெயர் மறைந்து,மலைமகள் என்னும்
நற்குலப் பெயர் பெற்றதால் மகிழ்ந்தவளே!
இளம் வயதிலேயே இறைவன் எண்ணப்படித் தவம் ஆற்ற முனைந்த அம்மையை,உ =குழந்தாய்!
மா ==வேண்டாம்.தவம் வேண்டாம் எனப் பெற்றோர்கள் வேண்டியதைஇறைவன் கட்டளை"எனக்கூறித் தவம் மேற்கொண்டு,தவத்தால் இறைவனை மணந்தும்,அவன் உடலில் சரிபாதி பெற்றும் திகழ்ந்தவளே!
அன்னம் அளிக்கும் கரத்துடன் அன்னபூரணியாய் விளங்குபவளே!அறத்தை நிலை நாட்டப் போர்
புரியும் துர்க்கையே!நிலத்திற்குச் சுமையாகவும்,வரபலத்தால் தீமை புரிபவர்களாயும் விளங்கும் அரக்கர்களை அழிக்கும் காளியே!அடியவர்களின் துயர்ச் சுமையைக் களையும் சங்கரியே!
எம் ஊர் வருக.எம்மீது அருள்மழை பொழிக என அன்போடும்,பக்தியோடும் வேண்டி வணங்கும்
கன்னியாகுடியில் வீற்றிருப்பவளே!செங்கீரை ஆடி அருள்வாய்.
அமுதம்போல் அருள்மழை பொழியும் கன்னியாகுடிக் கல்யாணி அம்மையே!செங்கீரை ஆடி அருள்வாய்.
விளக்கம்
இலகுவேல் ........அன்மொழித் தொகையாய் முருகனைக் குறிக்கிறது.
இதம் தரு குலம் ......இங்கு இதம்....பண்பாட்டைக் குறிக்கிறது.
அனம் வளர்....... அன்னம் என்பதன் இடைக்குறை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக