செங்கீரைப் பருவம்....2
தவழ்நடை தளிர்விரல் தலைதொடு மண்மகிழ்
தளிர்ப்பதம் சிவந்தேக,
தவப்பயன் தலைமகள் உதித்தனள் எனப்போற்றித்
தனமெனத் தலைவி வணங்கும்
சிவக்குல அடியவர் அவமழி தூயவளே!
சிவம்தொழு சேயவளே!
சிவமடைத் தவமலை மகளுரு மாணிக்கமே!
சிவனுடன் இணைந்தவளே!
நவமலர் நகைமுகை நறுந்துளி சுவைவண்டு
நமசிவ நலமுரைக்கும்
நவரசச் சுவைபொதி கலைவளர் கனிநகர்
நலமருள் நற்றலைவியே!
கவலைகள் களைந்திடும் கரமலர்க் கல்யாணி
செங்கீரை ஆடியருள்:
கவிபுகழ் கனிநகர் புவிபுகழ் பொன்மகளே!
செங்கீரை ஆடியருள்.
பொருள்
தவழ்ந்து வரும் அம்மையின் கால்,கைவிரல் நுனி தீண்டுவதால் நிலமானது மகிழ்ந்தது:அம்மையின் மென்மலர்த் திருவடிகள் தவழ்வதால் சிவந்தன.கன்னியாகுடியில் அம்மை தோன்றியது யாம் செய்த
தவப்பயன்,எனப் போற்றிவணங்கும்,
சைவசமய அடியவர்களின் பாவங்கள நீக்குபவளே!சிவபிரானைத் தொழுகின்ற தூயவளே!
சிவனை அடைவதற்காக இமயமலையில் இமவானின் மகளாய் உருவெடுத்துத் தவமிருந்து,
சிவனுடன் ஒன்றி பாதியுடல் பெற்றவளே!
புதிதாய்ப் பூக்கத் துவங்கும்,மென்மலர் மொட்டு நுனியில் அமர்ந்து,தேனைச் சுவைத்து,"சிவாய
நம"எனப்பாடும் வண்டுகளும்,நவரசச் சுவைமிகுந்த காலை வளர்க்கும் ஊராகிய கன்னியாகுடியில் உலகோருக்கு நலம் அருளும் தலைவியே!
துன்பங்கள் போக்கிடும் அபயக்கரம் கொண்ட கல்யாணியே!செங்கீரை ஆடி அருள்வாய்.
கவிஞர்கள் போற்றும் கன்னியில்,உலகோர் போற்றும் பொன்மகளே!செங்கீரை ஆடி அருள்வாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக