தாலப்பருவம்
மணியொளிர் மலைதவழ் மழைக்குழல் மரகதமே!
மணியொலி தனில்மிகு கொலுசினை அணிந்தவளே!
முனிவரர் புகழ்ந்திடும் நனியழ குடையவளே!
முனிவுடை மகிடனை அடக்கிய மாமகளே!
தனிசிவன் தழல்சினம் தணிந்திடக் கனிந்தவளே!
தனிமையில் தளிர்மையில் தவத்தினில் அமர்ந்தவளே!
தணித்திடு சினத்தவர் மனத்தினில் உறைபவளே!
தணிகையன் அணிவேல் தவத்தினால் அளித்தவளே!
நனிமலர் நகைமுகை நறுமணச் சோலையில்
நுனிதொடு நுகர்மது கரமது நுண்ணிசையொலி
கனிமிகு கவின்மரம் கலைமிகு பள்ளிகள்
கனிந்திடும் கன்னியின் கலையரசி! கல்யாணி
கனிச்சுவைக் காப்பியமே! கருணைக் கற்பகமே!
கனிக்குடிக் கல்யாணி! தாலோ! தாலேலோ!
கனியிதழ்க் குமரனைக் கருணையால் காத்தவளே!
கனிக்குடிக் கல்யாணி! தாலோ! தாலேலோ!
பொருள்
நவரத்தினங்கள் விளைவதால்ஒளிமிகுந்த மலைகளில் தவழ்கின்ற கருமேகம்
போன்ற கூந்தலை உடையவளே! ஒலியெழுப்பும் மணிகள் உள்ளார்ந்த
கொலுசினை அணிந்தவளே! முனிவர்கள் போற்றிப் புகழும் அழகுடையவளே!
சினத்தோடு போர் புரிய வந்த மகிஷாசுரனை அழித்த வீரத் தலைவியே!
சிவனின் சினம் தணித்து மனம் அமைதி அடைய வழி வகுத்தவளே!
ஐந்து வயதினில்தனியே அமர்ந்து கவம் இயற்றியவளே! சினத்தை அடக்கியவர்
மனத்தில் உறைபவளே! சூரபன்மனை வென்றிட, தவமிருந்து பெற்ற வேல்
ஆயுத த்தை வேலனுக்கு அருளியவளே!
மணம்மிகுந்த மலர்கள் நிறைந்த சோலைகளில்,மதுவை மலர்களில்
உண்ட வண்டுகள் எழுப்பும்இன்னிசை ஒலி, பழுத்துத் தொங்கும் க்கனிகள்
உடைய மரங்கள்,கலைகளை வளர்க்கும் பள,ளிக் கூடங்கள் நிறைந்து விளங்கும்
கன்னியாகுடி என்னும் ஊரின் கலையரசி. கல்யாணி அம்மையே!
கனிபோல் விளங்கும் காப்பியங்களின். சுவை போன்றவளே! கருணையில்
கற்பக மரம்போல் விளங்குபவளே! கன்னியாகுடியில் அருளாட்சி புரியும்
கல்யாணி அம்மையே! ஊஞ்சலில் உறங்குக,
கனிபோன்ற இதழ் கொண்ட முருகனுக்குப் பாலூட்டி வளர்த்த
தாயே! கன்னியாகுடி என்னும் ஊரில் அருளாட்சி புரியும் கல்யாணி
அம்மையே! இவ்வூஞ்சலில் உறங்குக,தாலொ! தாலேலோ,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக