திருமால் 3
நலம்தரும் நாமமே நாரணன் ஆகும்,
நவநிதிச் செல்வன் நகைமுக அழகன்
நனையுயிர் காத்திட நுனிவிரல் மலைதாங்கி
நின்றவன் நிலமகள் மூக்கால் மீட்டவன்:
வலம்தர ஐவர் வழிநடை விளக்கம்,
வரமதால் வனத்தில் வளமது ஆக்கம்:
வளைகரப் பிரிவால் வானவர் வீழ்வு:
வடிவுகள் பற்பல: வரைவுகள் பற்பல,
குலத்தால் குணத்தால் உயர்ந்த திருமால்
குலைகனி குவிழ்மலர் நிறைதிரு கலைநகர்க்
குறைவிலாப் புகழினாள் கல்யாணி போற்றிடும்
குறுகுறு மழலைநூல் காத்திட வருகவே.
தலமெனில் தமிழ்ப்பதி தனிலுறை தாயவள்
துதிநூல் வாழ்த்தித் தூயவள் காக்கவே.
துளசியாம் துழாயணி காக்கும் கடவுள்,
தலைமகள் தவழ்மகள் புகழ்நூல் புரக்கவே.
பொருள்
உலகோர்க்கு நன்மை பயக்கும் நாராயணன் என்ற பெயர் கொண்டவன்:எல்லாச் செல்வங்களுக்கும்
தலைவன்:வசீகர அழகுமுகம் கொண்டவன்:கோவர்த்தன மலையை ஒருவிரலால் தூக்கி,துயருற்ற
உயிரினங்களைக் காத்தவன்:அரக்கர்கள் கடலடியில் சிறை வைத்த நில மகளை வராக உருவில் சென்று மூக்கால் காத்தவன்:
இவனின் வடிவும்(அவதாரம்)பலப்பல:விளைவும் பலப்பல.கிருஷ்ணனாய்த் தோன்றிப் பாண்டவர்களை வழி நடத்தி வெற்றி அடையச் செய்தவன்:கைகேயி பெட்ரா வரத்தால் காடு சென்று அரக்கர்களை அழித்தவன்:தவமுனிவர்களுக்கு வளவாழ்வு தந்தவன்:சீதையைப் பிரிந்து,தேடி
அலைந்து,இராவணன் முதலிய அரக்கர்களை அழித்தவன்:
குலத்திலும் குணத்திலும் உயர்ந்த திருமால்,குலைகுலையாய்ப் பழங்களும்,மலர்ந்த மலர்களும் நிறைந்த கன்னியாகுடி என்னும் சிற்றூரில் அளவிலாப் பெருமைகளுடன் விளங்கும் கல்யாணி
அம்மையைப் போற்றிடும்,பிள்ளைத்தமிழ் நூலைப் பரிவோடு காக்க வேண்டும்.
தமிழ் மணக்கும் ஊராகிச் சிறந்த சிவத்தலமாய் விளங்கும் கன்னியாகுடியில் கோயில் கொண்டுள்ள கல்யாணி அம்மையைப் போற்றும் நூலைவாழ்த்தி,அன்னையையும் வாழ்த்த வருக,துளசிமாலையணிந்த காக்கும் கடவுளாம் திருமால்,தலைமகளாம் கல்யாணியம்மை என்னும் குழந்தையைப் போற்றும் இந்நூலை வாழ்த்திக் காத்தருள்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக