கன்னியாகுடி கல்யாணி அம்மை பிள்ளைத்தமிழ்
காப்புச்செய்யுள்
காப்புச்செய்யுள்
உலகெலாம் நின்றோங்கும் ஓங்கார நாத!
நிலவுக் குழைமகள் மைந்த!====அலகிலா
ஆட்டுடையான் ஆனந்த வாரிதியே!அன்னை
நலம்போற்றும் நூலினைக் கா.
பொருள்
பெண்பாற் பிள்ளைத் தமிழ் அமைப்பில்,கன்னியாகுடி என்னும் சிற்றூரில் கோயில்
கொண்டுள்ள கல்யாணி அம்மை மீது பிள்ளைத் தமிழ் படைக்கத் தொடங்கியதும்,
எல்லாச்செயல்களையும் இனிதே முடித்துத் தரும் விநாயகப் பெருமானை வணங்கும்
முகத்தான் காப்புச் செய்யுள் அமைகிறது.
உலகங்கள் முழுமையும் ஆட்கொள்ளும் முறையில்,காட்சி தரும் "ஓம் "என்னும்
பிரணவப் பொருளின் தலைவா!அடியவருக்காக நிலவையே காதணியும் தோடாகக்
கொண்ட அபிராமி,கல்யாணி அம்மையின் புதல்வா!அளவிட முடியாத ஆடல்களும்,திருவிளையாடல்களும் கொண்ட கைலாச நாதரின் மனத்தே மகிழ்ச்சி
தோற்றுவிக்கும் கடலமுத மழலையே!விநாயக!கல்யாணி அம்மையின் புகழ் பாடிப்
போற்றும் இப்பிள்ளைத் தமிழ் நூல் சீரும் சிறப்பும் பெற அருள் புரிவாயாக,என
வணங்குகிறார் ஆசிரியர்.
விளக்கம்
நிலவுக்குழை .........அபிராமி பட்டருக்காகத் தன் குழையையே நிலவாக்கினாள் அபிராமி அன்னை.
உருவகம் தரும் பொருள் இது.
உவமைத் தொகையாகக் கொண்டாள் நிலவுபோன்ற தோட்டினை அணிந்த அன்னை
எனப்பொருள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக