நான்முகன் ....5
நான்மறை நாவரசி நாவினில் நிற்க,
நாரணன் நாபியில் நலத்தவ நற்றொழில்
நாளெலாம் படைப்பு:நீள்வழி படைப்பு:
நாடினோர் நற்கதி நல்வர நாயக!
வானவர் வாழ்வதும் வாயசை வேதமே:
வானலை கோள்களும் வளர்வதுன் வரத்திறன்:
வாய்வுடன் வற்றா வடலையும் வளர்முதல்:
வாசுகி,வானதி வரைத்தடம் வழங்கியோய்!
தானவர் ஆக்கமும் தந்தது துளிவரம்:
தானவர் அழிவையும் தளிர்த்தது ஒளிமுகம்:
தாழ்வும் உயர்வும் தவப்படி தருபவ!
தாமரை மேலமர் தத்துவத் திசைமுக!
தேனமர் சோலைகள் தீந்தமிழ் சாலைகள்
கானக் கருங்குயில் கலையூர்க் கன்னியில்
மான்கர மேலவன் மனையகக் கல்யாணி
மேன்மை மேவுக எனநீ வாழ்த்துக.
பொருள்
கலைமகளை நாவினிலே கொண்டவன்:திருமாலின் தொப்புள் கொடியிலே அமர்ந்தபடிப் படைப்புத்
தொழிலாற்றும் படைப்பாளி:காலம் காலமாய் ஆற்றும் படைப்புத்தொழில் உடையவன்:தன்னை நாடித் தவம் இருப்போர் வேண்டும் வரங்கள் அளிப்பவன்.
விண்ணவர்களை வாழவைத்து வழி நடத்தும் மறையாள!வானிலே இயங்கும் கோள்களைப்
படைத்தவ!காற்றையும்,நெருப்பையும் தந்தவனே!வாசுகி போன்ற நோக்கங்களையும்,கங்கை போன்ற நதிகளையும் மலைகளையும் தோற்றுவித்தவனே!
அரக்கர்களுக்கு வரங்கள் அளித்து வாழ வைத்தவனே!அதே அரக்கர்கள் அழியவும் வழி வகுத்த
சுடர் முகம் கொண்டவனே!உலக உயிர்களுக்கு,உயர்வையும்,தாழ்வையும்,அவ்வவற்றின் விதிப்படி
அளிப்பவனே!தாமரைமலர்மீது அமர்ந்திருக்கும் நான்முகனே!
தேன்சிந்தும் மலர்ச்சோலைகளும்,தமிழ் முழங்கும் பாட சாலைகளும்,இனியகுயிலொலியும்
நிறைந்த கலைகள் மிகுந்த கன்னியாகுடி என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும்,கைலாச நாதக்
கடவுளின் துணைவியாம் கல்யாணி அம்மையின் பெருமை அவர்மீது பாடப்படும் பிள்ளைத்
தமிழ் நூலால் மேலும் வளர்க என வாழ்த்திடுவாய்.காத்திடுவாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக