தலைவன் முருகன் பெருமை
கண்ணழகன் கால்போற்றின் கண்ணருளும் காரழகன் ----மண்ணழகன்
விண்ணழகன் விண்வேந்தன் பொன்மகளின் தண்ணழகன்
மின்னலிடை வள்ளிமலைக் கன்னல் மொழியாளின் ------ மன்னனவன்
அன்னம்சூழ் பொய்கைநகர் அன்னையவள் கல்யாணி
அன்பணைப்பில் மெய்யொன்றி ஆறுமுகப் பேறுற்றான் ------முன்னவன்
நன்னரு நீர்க்கங்கை நற்றலை தாங்கியோன்
கைலாச நாதனின் கண்பொறி தோன்றியோன் -------கைலையே
சைலத் தணிகை மலையென் றமர்ந்தவன்
நல்லொளி ஆதவனும் அல்லழித் திங்களும்,-------தொல்வழி
மல்லல்மா ஞாலம்கா கண்ணாகக் கொண்டவன்:
பொருள்
தான் கண்ட,கண்ணுற்றுக் காதல் கொண்ட தலைவனின் பெருமையைப் பேசுகிறாள் தலைவி.
அழகே உருவான கண்களைக் கொண்டவன் முருகன்.அவன் காலடிகளில் விழுந்து வணங்கும்
அடியவர்களுக்குக் கருணை காட்டும்கார்மேகம் போன்ற கண்கள் உடையவன்: நிலவுலகில்,விண்ணுலகிலும் முருகனே அழகன்.இந்திரன் மகள் தேவயானையை
மணம் கொண்டவன்.அவள் மனம் கவர்ந்த அழகன்.வள்ளி மலையின் தலைவி வள்ளியின் காதற்கணவன். கன்னியாகுடியில் அன்னை கல்யாணி அம்மையின் அரவணைப்பில்
ஆறு குழந்தைகளும் ஒன்றாகி ஆறுமுகம் கொண்ட கந்தனாய்க்காட்சி தருபவன்.கங்கையைத்
தலையிலே தாங்கிய சிவபெருமானின் நெற்றிக்கண் பொறியிலே தோன்றியவன்.தந்தைக்குக்
கைலை மலைபோல தனக்குத் திருத்தணிகை மலையைக் கொண்டவன்.ஆதவனையும்,
திங்களையும் இரு கண்களாகக் கொண்டு உலகைக் காப்பவன்.,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக