பாவலர் பாராட்டும் பைந்தோகை நீலமே!
நாவலர் பாட்டின் நடமாடும் நற்சான்றே!----தூவலாய்த்
தூறிடும் தென்மழை ஆடிடும் அற்புதமே!
மாறிடும் தோகை வனப்பின் மரகதமே!-------சேறிடும்
தாமரை,திங்கள்,இளவேனில்,தென்றலொடு
காமநிறை காட்சிகண்டு காலமகள் கண்குளிர -----ஓமெனும்
உட்பொருளான் மாப்புகழை உள்ளமார்ந்து ஆடுகின்ற
புட்கலையே!புள்ளிமுத்து,கீற்றுவைரப் பொன்னழகே !------மட்டில்லா
மாமகிழ்ச்சி மண்குளிரக் கண்குளிரக் கால்குளிர
மாமுருகன் மாக்கருணைபோலாடும் மாமயிலே!-------ஏமமெலாம் 30
பொருள்
புலவர்கள் பாராட்டும் நீல வண்ணம் கொண்ட பசுந்தோகை மயிலே!கவிஞர்கள் தமது
கவிதையில் உவமை என்னும் அணிச்சொல்லாக விளங்கும் மயிலே! வானமேகம்
மெல்லிய தூறலைச் சிந்துமாயின் அந்த இளமழையில் அற்புதமாய் ஆடும் மயிலே!
ஆடும்பொழுது,பல்வேறு வண்ணங்கள் பிரகாசிக்கும் அழகு தேவதையே!சேற்றில்
முளைத்த செந்தாமரை,வானத்து நிலவு,இளவேனில் பருவம்,தென்றலாம் காற்று,
ஆகிய மனம் நிறைந்த காட்சியைக் கண்டு,நிலவுலகம்,உலக மக்கள் மனம் குளிருமாறும்,
ஓங்காரப் பொருளின் நாயகனாம் முருகனின் புகழை உள்ளத்திலே கொண்டும்,
ஆடுகின்ற கலைப் பறவையே!முத்துப் புள்ளிகளும்,வைரக் கோடுகளும்,உடலிலே கொண்ட
பொன்னாபரணம் போன்ற அழகுடைய மயிலே! மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு,உலகு
மனம் குளிரவும்,காண்போர் கண்குளிரவும்,மெய் சிலிர்த்துக் கால் நடுங்கவும்,
முருகனது கருணைபோல் ஆடும் மயிலே!
விளக்கம்
புட்கலையே!புள்ளிமுத்து,கீற்றுவைரப் பொன்னழகே!.............இங்கு கலைப்புள் எனவும்,
முத்துப்புள்ளி எனவும்,வைரக்கீற்று எனவும்,அழகுப் பொன் எனவும் "இலக்கணப் போலியாகப்
பொருள் கொள்ள வேண்டும்.ஒரு அடி முழுவதும் அமைந்துள்ளது.
மட்டில்லா ................ போலாடும்.----இவ்வரிகளில் முருகன் அருள் பெற்ற அடியவர் ஆட்டமும்,
மயிலின் ஆட்டமும் கருத்தால் போற்றப்படுகிறது.
இறைவன் முருகன் அருள் பெற்றதால் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்த அடியவரின் கண்
குளிர்கிறது:உணர்ச்சி மேலீட்டால் கை கால் நடுங்குகின்றன.ஊரும் உறவும் மகிழ.ஆவேசம்
மேலிட அடியவர் ஆடுகிறார்.
இறைவன் கருணைபோன்ற மழை பெய்வதால் உடல் சிலிர்த்து,மெய் மறந்து,தோகை விரித்துக்
கண்ணும்,காலும் குளிர மயில் ஆடுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக