மனம் கசிந்து போற்று
கொச்சகக் கலிப்பா
சொல்லெல்லாம் இனிக்கின்ற செந்தமிழாம் பண்ணூட்டிக்
கல்லெல்லாம் கனிகின்ற கவின்பாடல் பாடிநின்ற
நல்லடியார் நால்வருமே நாளெல்லாம் அருள்பெற்றார்:
கல்லாடன் கன்னியான புகழ்பாடிக் கரைமனமே.
பொருள்
இனிக்கும் செந்தமிழ்ச் சொல்லெடுத்து,இசை கூட்டிக் கல்லும் கனியாகும் அளவு
கசிந்து தேவாரத் திருவாசகம் பாடிய சம்பந்தர்,சுந்தரர்,திருநாவுக்கரசர்,மாணிக்க வாசகர்
ஆகிய நால்வரும் சிவபிரானின் அருள் பெற்று உயர்ந்தனர்:ஆதலின் மனமே! நீயும் கல்லால மரத்தின்
கீழமர்ந்து நன் ஞானம் வழங்கும் கன்னியாகுடிக் கைலாச நாதன் புகழைக் கசிந்து உருகிப் போற்று.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக