கைலாச நாதன் பணி
அறுசீர் ஆசிரிய விருத்தம்
புகழுடையான் புண்ணியன் புலித்தோல் ஆடையன் .
புனலுடுத்த பைஞ்சடையன்
அகமுற்ற பூசலார் ஆலயம் அமர்ந்தவன்,
அல்லாடும் சுடுகாட்டன்
திகம்பரன் திவ்வியன் தசமுக இசைபரன்
தில்லையில் ஆடுகூத்தன்
குகனருள் கன்னியின் குணசீலன் கொண்டாடும்
கல்யாணி நாதன்பணி.
பொருள்
அழியாப் புகழுடையவன்:தூய்மையானவன்:புலித்தோலை அரையில் அணிந்தவன்:
கங்கைதங்கிய சடையை உடையவன்:மனத்திலே கோயில் எழுப்பிய பூசலார் என்னும்
நாயனாரின் மனத்திலே உறைபவன்:நள்ளிரவில் சுடுகாட்டில் நடனம் ஆடுபவன்:
உலகத்தையே ஆடையாய் அணிந்தவன்:நல்லற நாயகன்:இராவணனின் இசையில் மனம் இரங்கியவன்:தில்லையில் ஆடும் நடராசப் பெருமகன்:குகனின் அருள்பெற்ற கன்னியாகுடியில் வீற்றிருக்கும் கருணைக் கடவுள்:கல்யாணி அம்மையால் போறப்ப படும் கைலாச நாதனைப்
போற்றிப் பணிவாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக