வலைச்சியார்
நேரிசை வெண்பா
காணம் நிறைமீன்கள் காற்றுடன் வீசிநிற்கப்
பேணும் வணிக வலைச்சியீர்!----பூணழகில்
காணும் கலையழகீர்!கன்னிவந்த மின்னிடையீர்!
மாண்பாகா நீரில்லா வாழ்.
பொருள்
படகில் சென்று வலையில் பிடித்த மீன்கள் கூடையில் நிறைந்து,நாற்றத்தைக்
காட்ரோடுகலக்க,அவைகளை விற்க வந்துள்ள வலையர் இனப் பெண்களே!! ஒட்டிய அழகும்,பார்ப்போர் மனம் கவரும் கலையும் கொண்டவர்களே!கன்னியாகுடி வந்து,காட்சி தரும்
மின்னல்போன்ற இடை உடையவர்களே!உம்மையும்,உம் அழகையும் பிரிந்து வாழ என் மனம்
இயையாது:ஆதலின் கடைக்கண் பார்வை வீசும்,என மீன் விற்கும் வலைப் பெண்ணிடம்
மனதைப் பறி கொடுத்தவன் புலம்புகிறான்.
வலைச்சியரே!நீர் (கடலும்,குலமுக்.ஆறும்) இல்லாதகாலை உம் வாழ்வை எண்ணவே
அச்சமாயுள்ளது,எனவும் பொருள் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக