ஞாயிறு, 3 ஜூலை, 2016

தலைவி வேண்டுகோள்

                              தலைவி வேண்டுகோள்

                         கட்டளைக்  கலித்துறை

செங்கிளி மன்மத!செலுத்தும் மலர்க்கணை செம்மையோ?
 பைங்கிளிப் பாவைப்  பாகப் பரமனோ பாராதிருக்க ,
ஐங்குரல் தூற்றும் அலர்ச்சொல் அகமெலாம் நைத்துவிடக்
கங்குல் பகலில் கடையாள் படுதுயர் காணாயோநீ.

                                   பொருள்
 கிளித்  தேரில் செல்லும் மன்மதனே!தவிக்கும் என் மீது மலரம்பு விடுதல் அழகாகுமோ?
அழகிய கிளியைத் தன் கையிலே கொண்டு காக்ஷி தரும் கல்யாணி அம்மையைத் தன்
பாகத்திலே கொண்ட கைலாச நாதன் என்னை ஏறெடுத்தும் பாரான்:ஊரெல்லாம்
ஒரே குரலில் என்னை அலர் தூற்றி,மனத்தை நோக   வைக்கும்:இரவும் பகலும்
அந்தக் கன்னியாகுடி நாதனையே எண்ணித் துயருறும் அடியாள் படும் வேதனை
அறியாய் நீ,அறிந்தால் மலர்க்கணை இட்டு,மேலும் என்னைத் துன்புறுத்த மாட்டாய்.உனது
பணியை நிறுத்துவாய்,எனத் தலைவி வேண்டுகிறாள்.(தலைவி இரங்கலில்  இது அமையும்)

             


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக