வஞ்சித்தாழிசை
வாழ்வுதரும் வளமும்தரும்
தாழ்வகற்றும் ஊழ்வினையை
ஏழ்பிறப்பும் போக்கிடும்
தாழ்ந்துபோற்று கன்னியான்
சூழ்ந்துவாட்டும் சூதகற்றும்
ஆழ்ந்தமன அன்புகூட்டும்
ஏழ்பிறப்பும் காத்துநிற்கும்
தாழ்ந்துபோற்று கன்னியான்.
வீழ்ந்தரக்கன் வீணைமீட்டு
கூழுடலைக் குணம்கண்டான்
ஏழ்பிறப்பும் இசைகாக்கும்
தாழ்ந்துபோற்று கன்னியானை.
இப்பாடல் ஒருபொருள் மேல் மூன்றடுக்கி வந்த வஞ்சித்தாழிசை ஆகும்.
கன்னியாகுடியில் வீற்றிருக்கும் கைலாச நாதனைப் பணிந்து போற்றினால் நமது
தாழ்வெல்லாம்,மறைந்து,வாழ்வும் வளமும் பெருகும்:ஏழ்பிறப்பிலும் நமது ஊழ்வினையை
மாற்றிடும்:
நம்மைச் சூழ்ந்து துன்புறுத்தும் தீயவைகளை அழிக்கும்:நமது மனத்தில் கருணை கெழுமிய
அன்பை வளர்க்கும்:ஏழ் பிறப்பும் காக்கும் கன்னியானைப் போற்றி வணங்கு.
கைலை மலையையே தூக்கி,இறைவன் கால் விரலால் அழுத்த,நடுவே சிக்கிக்
கொண்ட இராவணன் தன்னுடல் நரம்புகளால் வீணை உருவாக்கித் துதித்தான்,வரமும்,வளமும்
பெற்றான்:ஏழ் பிறப்பும் புகழை வளர்க்கும் கன்னியாகுடிக் கைலாச நாதன் தாளைப்
போற்றி வணங்கு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக