பாங்கி கூற்று
நேரிசை வெண்பா
அருளாள!அல்லற் பிறவியைப் போக்கும்
கருணைக் கனியா !கழலே ----திருவெனக்
காத்துநிற்கும் காரிகை கண்டே மகிழுமாறு
பூத்தமலர் மாலை அருள்.
பொருள்
தலைவியின் பிரிவுத்துயர் தாளாத பாங்கி தலைவனாம் கன்னிக் கைலாச நாதனிடம் இரங்கி
வேண்டுதல்.
பிறவிப் பிணியைப் போக்கி,அல்லல் அகற்றும் அருள் மனம் கொண்டவனே!கருணைமிகுந்த
கன்னியாகுடிக் கைலாச நாதனே!உனது திருவடியே தனது செல்வமாய் எண்ணி ,அருள்வேண்டிக்
காத்து நிற்கும் தலைவி,கண்டு மகிழுமாறு,அவள் விரும்பும் மலர்மாலை,மணமாலை அருள்வாயாக,
எனப் பாங்கி இரங்கி வேண்டுகிறாள்.
விளக்கம்
கனியா .........கன்னியா!என்பதன் இடைக்குறை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக