சம்பிரதம்
எண் சீர் ஆசிரிய விருத்தம்
கூறு போட்ட குழந்தை உட லுணவைக்
கூவி அழைத்துக் கொடுத்தான் பேருயிர்:
ஏறு ஊர்தி எங்கள் கன்னியான:
எந்தை போற்றி எதுவும் செய்வோம் :
நீறுடைச் சாம்பலுள் நெருப்பு காட்டுவோம்:
நெற்றிகுழை நீரிலே வெண்மை பூசுவோம்:
நாறுமே நன்மலர் நாங்களளி நறுமணத்தால்
நாவிலே பச்சையிட்டுச் செம்மை ஆக்குவோம்.
பொருள்
செய்யும் செயலைக் கற்பனை காட்டி விரிவு படுத்தித் தமது செயற்கரிய செயாலாய்ப் பேசுவது.
சிறுத்தொண்ட நாயனாரைச் சோதிக்க வந்த சிவபெருமான் அவரது குழந்தையை உணவாக்கி
வழங்குமாறு கேட்க,அவரும் பிள்ளைக்கறி அமுது வழங்க,அருள் ஈசன் அவருக்கு காட்சி தந்ததோடு,குழந்தையின் உயிரும் வழங்கினார்.காளைவாகனன் ஆகிய கன்னியாகுடியான்.
அவரைப் போற்றும் நாங்கள் எரிந்து முடிந்த சாம்பலுக்குள் நெருப்பைக் காட்டுவோம்:
நெற்றியிலே குழைத்து இடும் நீரை(றை )வெண்ணிறமாக்குவோம்:மலர்களுக்குள்
நறுமணம் ஊட்டி,மணம் உடையதாக்குவோம்:நாவிலே பச்சை நிறம் வாய்ந்த வெற்றிலையைப்
போட்டு,அதனைச் சிவப்பாக்குவோம்,என்று பெருமை பேசுவார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக