தலைவன் கூற்று
எண்சீர் ஆசிரிய விருத்தம்
சொல்வாயோ?மேகமே!செல்வாயோ!சீர்கன்னி.
சொற்பொருள் சோதியன் சேவடி துதிக்கும்
நல்லோர் நாட்டின் நடுங்கி வருந்தும்,
நல்லவள் காண நாடிடஇயலுமோ?
இல்லா இடையும்இருக்கும் கண்ணும்,
இலவம் பாதமும் எழிலுரு மேனியும்,
வல்லே விரையும் வினைதீர் முடிவில்
வரைந்தேன் மனத்தில் வடிவிடம் கூறு.
பொருள்
வினை முடித்துத் திரும்பும் தலைவன் வழியில் வாடிய தலைவி முகம் தோன்ற மேகத்திடம்
புலம்புகிறான்
மேகமே!கன்னியாகுடி என்னும் ஊரருகே செல்வாயோ?சென்றால் என்னிலை உரைப்பாயோ?
சொல்லும் பொருளுமாய்ச்சோதியுமாய்விளங்கும் கன்னியாகுடிக் கைலாச நாதன் சேவடியை
நாளும் தொழும் நல்லோர் நிறைந்த ஊரின் நடுவே அமைந்த இல்லில் தனியே தவித்து வருந்தும்,
என் தலைவியைக் காண உன்னால் இயலுமோ?இல்லைஎன்று சொல்லும் அளவு சிற்றிடையும்,இருக்கு
என்று சொல்லும் அளவு விரிந்த கண்ணும்,இலவம் பஞ்சு போன்ற மென்மைப்பாதமும் கொண்ட
எழில் உருவான மேனியும் கொண்ட அவளை,வினை முடித்து விரைவாய் வரும் வேளையில்
மனத்தில் வரைந்தேன்,என வடிவுடையாளிடம் கூறுவாயா? என்று புலம்புகிறான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக