பாயிரம்
உலகம் உனக்கும் ஒருதனிச் செம்மல்
அலகிலா ஆடல் ஆனந்தக் கூத்தன்
அவன்வாழ் நல்லூர் அருங்கன்னி யாகுடிச்
சிவனே கைலாச நாதக் கடவுள்.
அவனை வணங்கும் ஆதி சைவன்
அவனருள் ஆசி அனைத்தும் அடைந்து,
அவன்புகழ் பாட அமைந்தது கலம்பகம்.
நந்தன் கண்ட நாயகப் புன்கூர்
சொந்த ஊரே கன்னியா குடியாம்.
அந்த மண்ணில் வந்து பிறந்த
சுவாமி நாதக் குஞ்சம் மாளின்
அவமோ தவமோ அடியேன் மகனாம்,
சுவாமி சுப்பிர மணியன் என்போன்
சுவாமி போற்றத் தொடுத்தனன் கவிதை.
முந்தை மரபின் முனைந்தேன் யாப்பு.
எந்தை ஏற்பான் ஏழை சொல்லே,
எங்கும் பரவுக எழிலுடைச் சைவம்
மங்களக் கல்யாணி அருளுடன்
சங்கத் தமிழைச் சாற்றினேன் நன்கே.
உலகம் உனக்கும் ஒருதனிச் செம்மல்
அலகிலா ஆடல் ஆனந்தக் கூத்தன்
அவன்வாழ் நல்லூர் அருங்கன்னி யாகுடிச்
சிவனே கைலாச நாதக் கடவுள்.
அவனை வணங்கும் ஆதி சைவன்
அவனருள் ஆசி அனைத்தும் அடைந்து,
அவன்புகழ் பாட அமைந்தது கலம்பகம்.
நந்தன் கண்ட நாயகப் புன்கூர்
சொந்த ஊரே கன்னியா குடியாம்.
அந்த மண்ணில் வந்து பிறந்த
சுவாமி நாதக் குஞ்சம் மாளின்
அவமோ தவமோ அடியேன் மகனாம்,
சுவாமி சுப்பிர மணியன் என்போன்
சுவாமி போற்றத் தொடுத்தனன் கவிதை.
முந்தை மரபின் முனைந்தேன் யாப்பு.
எந்தை ஏற்பான் ஏழை சொல்லே,
எங்கும் பரவுக எழிலுடைச் சைவம்
மங்களக் கல்யாணி அருளுடன்
சங்கத் தமிழைச் சாற்றினேன் நன்கே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக