காத்திடுவாய் கைலாச நாதா
பன்னிரண்டு சீர் ஆசிரிய விருத்தம்
வாழும் வகையறியா வெம்பிஞ்சுப் பன்றிக்
குருளைகள் குறைதீர் அமுதூட்டிக் காத்த
வள்ளலே!வாழ்வறியா வன்னெஞ்சன் வந்தித்தேன்
வாழும் வகைகாட்டி வளப்பாதம் தலைவைப்பாய்.
வண்காகம் வெற்றிகொள்ளும் வீரம் கரிக்குருவி
பெற்றநிலை கண்ணுற்றேன்:பேரருள் எனக்கருளே.
ஏழுகடல் நன்னீரும் இயைந்துவந்த மாமதுரை
எழுபிறப்பும் நற்கதி பெற்றாளே பாண்டிதேவி
எத்திறனும் இல்நாயேன் ஏங்குகின்றேன் ஏற்றிடுவாய்.
ஊழ்வினை மாற்றிச் சூழ்வினை போக்கி,
உலகோர் புகழுமா றுயர்த்திய கைலாச!
உன்னடி பணிந்தேன் காத்திடுவாய் நாதனே.
பொருள்
ஈன்ற சில நொடிகளிலேயே தாய்ப்பன்றி இறந்துபட ,அதனை அறியாத பன்றிக் குட்டிகள்
பால் குடிக்கத் தவியாய்த் தவிக்க,அவைகளின் மீது அன்புற்றிரங்கிய சிவபெருமான்,தானே
தாய்ப்பன்றியாகி,அவைகளுக்குப் பாலூட்டினான்: அப்பன்றிக் குட்டிகளைப் போல ,எதுவும்
அறியா மூடனான எனக்கும் ஞானம் அளித்துக் காப்பாய் கைலாச நாதப் பெருமானே!
நிலையா வாழ்வை நிலையெனக் கருதித் துயருற்றேன்,நின் மலர்ப்பாத தீக்கை அருளிக்
காப்பாய்.வன்மையான காகத்திடமிருந்து தப்பித்து வாழக் கரிக்குருவிக்கு வீரமும் விவேகமும்
உபதேசித்த எம்பெருமானே!எனக்கும் மாய மிலேச்சங்களை வென்றிட நல்லருள் உபதேசித்து,
உன்னருகு சேர்த்திடுவாய்.
மாமியாராம் பாண்டிமாதேவியாருக்காக ஏழு கடலையும் மதுரைக்கு வரவழைத்து,அதன்
வழியே புனிதம் வழங்கிய சோம சுந்தரனே!கடையினும் கடையனாம் அடிநாயேன் அக்கதி
பெற ஆசைப்படுகிறேன். அருள்வீரா!
இப்பிறப்பில் இழிசெயல் துன்பநிலை மாற்றி,ஆற்றும் பிழையெலாம் பொறுத்து,மன்னித்து,
ஆட்கொண்டவனே!என்னையும் உலகோர் புகழுமாறு ஆக்கியவனே! கன்னியாகுடிக் கைலாச
நாதப்பெருமகனே!உன்னடி பணிந்தேன்,காத்துக் கடையேற்றுவாய்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக