நேரிசை ஆசிரியப்பா
உரைப்பான் உணர்வான் இரண்டும் தானாய் ,
உரைக்கும் சொல்லும்,உணர்த்தும் பொருளுமாய்,
திரையும்,திரையை நீக்கும் ஒளியுமாய்.
கற்றவர் காணாக் கடவுள் கடலாய்,
கல்லான் அன்பால் காணும் கனியாய்,
பொல்லான் பூசையை ஏற்றும் அருளி,
ஐயறி உயிர்களின் ஆன்ம நேயனாய்,
நாலறி உயிர்க்கு நற்பலம் அளித்து,
ஆறறி உயிர்கள் தேறறி வாகி,
அல்லன வற்றுள் உள்ளன வாகி,
உள்ளன வற்றுள் இல்லன வாகி,
பற்றறு மெய்யில் பற்றுரு வைத்தும்,
சுற்றம் சூழ்ந்தும்,சுற்றம் தவிர்த்தும்,
குளக்கரைக் குழந்தைக் களப்பரி யருளும்,
வழக்கினில் வென்றே அடிமை ஆக்கியும்,
பழமத மீள்கை வயிற்றினில் பதித்தும்,
மழவடி தீக்கை மறையாய் அளித்தும்,
அடியவர் காத்திட ஆன்றநல் ஆடலும்,
முடியதில் அடியும்,முகமதில் கீறலும்
தடிநடை நடையும் தளிரிள நடையும் ,
கொண்ட கோலமும்,கண்டதிவ் வுலகு.
வண்டார் குழலி வலமுடைஅருளின்,
தன்னேர் இல்லாத் தகைமை கொண்டாய்.
கன்னிக் கோயில் காரிருள் களைந்தாய் .
மன்னே!மணியே!மரகதச் சிலையே!
பொன்னே!பொருளே!போற்றினேன்.
என்னே உன்புகழ்!என்றே பணிந்தேனே.
பொருள்
உரைப்பவன்,கேட்பவன் என்ற இருவரும் தானேயாகி ,உரைக்கும்சொல்லும்,சொல்லின் பொருளும்
தானேயாகி,மாயை என்னும் மாயத்திரையும்,அத்திரையை அகற்றும் ஞானமும் தானேயாகி ,
கற்ற அகம்பாவப் பெரியோர்களுக்குக் காணவியலாக் கடல்போல் பரந்துபட்ட தோற்றம் கொண்டும்.
கல்லான் ஆயினும் மனமுடன் போற்றுவானாயின் அவனுக்குக் காணும் கனிபோல் காட்சி தந்தும்,
கொடுமையான அரக்கன் ஆயினும்,அன்புடன் அவனாற்றும் பூஜையை ஏற்றும்,அருள் பாலித்தும்,
ஐந்து அறிவு கொண்ட யானை போன்ற விலங்குகளுக்கும் அவைகளின் போற்றல் ஏற்று
அருள் பாலித்தும்,நாலறிவுடைய பறவை இனங்களுக்கு,வலிமையும் வாழ்வும் அருளையும்,
ஆறறிவுடைய மானிடர்களைப் உற்ற உறவு முறை மலைமகள்,பல்வேறு வகையில் ஆய்வு செய்து,அந்நிலையிலும் அன்பு காட்டுவோர்க்கு அருள் பாலித்தும்,உண்டு என்பதில் இல்லாதனவாகியும்,இல்லை என்பதில் உள்ளனவாகியும்,பற்றற்று விளங்கும் உயிர்களிடத்தில் பற்று கொண்டும்,உற்ற சுற்றமாம் மலைமகள்,கணபதி,முருகன்,நந்தி சண்டிகேசன்,ஆகியோருடன்
காட்சி அளித்தும்,தன்னந்தனியனாய்,யோக தெக்ஷிணா மூர்த்தியாய்க் காட்சி தந்தும்,
குளக்கரையில் அழுது நின்ற ஆளுடைய பிள்ளை மீது அன்பு காட்டி,ஞானம் வழங்கிய அருளும்,
நீ,என்னடிமை என வழக்கு தொடுத்து,வெற்றியும் பெற்று,வெண்ணெய் நல்லூரில் சுந்தரரை
ஆள்கொண்டமையும் சமண சமயம் சென்ற தருமசேனராம் மருள்நீக்கியாரைத் தாய்ச்சமயமாம்
சைவம் திரும்பவைக்க,வயிற்று வலியாம் சூலை நோய் தந்து,துடித்தவரை நோய் நீக்கிக்
காத்து திருநாவுக்கரசராய் மாற்றியமையும்,காலடி தீக்கை வழங்கி,மறைபொருள் உணர்த்தி,
வாதவூரரைக் காக்க மண்சுமந்தும்,நரிகளைப் பரிகளாக்கியும்,ஆடிய திருவிளையாடல் அமைப்பும்,
பாசுபதம் வழங்க,விசயனிடம் முடியில் வில்லடி வாங்கியும்,மலைவேடன் அன்பிற்கிணங்க,
காலால் மிதித்து,முகம் கீறி அப்பிய கண்ணுடன் விளங்கியமையும்,அன்னையைக் காண ஊன்றுகோல்
ஊன்றி இமய மலைச்சாரலில் சென்று சோதித்தமையும்,மதுரையில் தடாதகைப் பிராட்டியாம்
அம்மையைக் காண அழகு இளமைக் கோலத்தில் சென்றமையும்,ஆகிய உமது திருக் கோலங்களைக் கண்டது இவ்வுலகு. வண்டுகள் மொய்க்கும் கருங்குழல் கொண்ட கல்யாணி அம்மையை இடப்பாகம் கொண்டு அருள் புரிபவரே! கன்னியாகுடி என்னும் ஊரில் கோயில் கொண்டு,மக்களின் அஞ்ஞான
இருளைப் போக்குபவரே!தலைவரே!அழிவில்லா இரத்தினமே! மரகத லிங்க வடிவுற்றவரே!
பொன்னும் பொருளும் வழங்குபவரே!உமது புகழைப் போற்றிடச் சொற்களே இல்லை;ஆயினும்
உம்மைப் பணிந்து,புகழ்ந்து போற்றுகின்றேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக