வெள்ளி, 24 ஜூன், 2016

தலைவி இரங்கல்

                         தலைவி இரங்கல்

                      நேரிசை வெண்பா
நல்லூர் மலர்களே!நாண்மலர் மன்மதனே!
பொல்லான் புனிதன் புனைவனோ ----அல்லானோ?
சொல்லா  லடித்தவன் சுந்தரன் தூதுவன்
கல்லானான்:கன்னிமனம் கூறு.

                              பொருள்
 ஆற்றாது தலைவி புலம்புகிறாள்:
   கன்னியாகுடியில் மலர்ந்த மலர்களே! ஐம்மலர் அம்பு கொண்ட மன்மதனே!என்மீது இரக்கம்
காட்டாத பொல்லாதவன் எப்படிப் புனிதன் ஆவான்?என்னோடு இணைவானோ!மாட்டானோ?
அந்தக் கன்னியாகுடிக் கைலாசநாதன்.பித்தா!பேயா! எனத் திட்டிய சுந்தரனின் காதலுக்குத்
தூது போனவன்,இன்று என் காதலை ஏற்காமல்,கல்மனம் கொண்டு விளங்குகிறான்:அந்தக்
கல்லால மரத்தடிக் கல்நெஞ்சக் கன்னியாகுடியானுக்கு,இந்தக் கன்னி மனத்தை எடுத்துக்
கூறுங்கள்! எனப் புலம்புகிறாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக