நற்பதம் நல்கும் சேவடி
எண்சீர் ஆசிரியச் சந்த விருத்தம்
மனத்தொடு குணத்தொடு மலர்தொடு உறவாகி,
மழைதொடு குழைதொடு தழைதொடு முகமாகித்
தனத்தொடு கனத்தொடு தவழ்ந்திடு சுகமாகி,
தலைத்தொடு அலைதொடு கலைதொடு சடையாகி
சினத்தொடு சிலிர்த்திடு பொறித்திடு கண்ணாகிச்
சிவத்தொடு பதந்தொடு தவத்தொடு முனியாகி,
இனத்தொடு கணத்தொடு இலங்கிடு கன்னியின்
இதந்தொடு பதந்தரு இணைத்திரு சேவடியே .
பொருள்
நல்ல மனமுடையோர் ,குணமுடையோர்,பூசனை செய்யும் மலராலே பற்று நீட்டிக்கவும்,
மழைக்கூந்தல்,குழைக்காது,மலர் போன்ற முகமும்,கனத்த கொங்கைகள் தவழ்வதில்
இன்பம் தரும் மலைமகளுடன் இணைந்தும் ,தலையதில் கங்கையும்,நிலவும் பூண்ட சடையும்,
தவறுகளை அழிக்கச் சினமுடன் சிலிர்த்து,நெருப்புப் பொறி பறக்கும் கண்ணும்,
நன்மையே குறிக்கோளாய்,காலடி அமர்ந்த முனிவர்களுடன் ஆற்றும் தவமும்,
கொண்ட கைலாச நாதன் சிவகணங்கள் புடைசூழ,விநாயகன்,வேலவன்,தொடர,கன்னியாகுடியில்
காட்சி அளிக்கிறான்.அவனது இரண்டு சேவடிகள் நமக்கு இனிமையையும்,நற்பதத்தையும்
நாளும் நல்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக