மணந்த மேன்மை
எண் சீர் ஆசிரிய விருத்தம்
சேவடி தேடிச் சென்றவன் காணாச்
சீறடி நோவச் சீர்மலை நடந்து,
பூவடி மேலாள் புண்ணியச் சாலை
பூணூல் பனைக்குடை புதுமறை வேதமாய்
நாவால் சாடி நலத்தால் வெகுள
நல்லருள் காட்டி தொல்லிருள் போக்கி
மேவா மேனை இமவான் மகளை
மேலோர்க் கன்னியில் மணந்தது மேன்மை .
பொருள்
அண்ணாமலையாய் நின்ற அருட்சோதியின் அடியைத் தேடி மாலவன் சென்றான்:
அவனால் காண முடியாத சிவனின் சீறடி நோகும்படி,மலைப்பாதையில் நடந்து,
இமயமலையில் தவமாற்றும் பூப்போன்ற மெல்லடி கொண்ட பார்வதியின் தவச்
சாலை நோக்கிப் பூணூலும்,பனை ஓலைக் குடை பிடித்தவாறும்,புது மறை ஓதும் அந்தணர் வேடத்தில் அடைந்து,தவம் இயற்றும் காரணம் கேட்டு,மணமகனாய் தேவி வரித்துள்ள
சிவனை இழிவு படுத்திப் பேசி,அம்மை கோபத்தால் அவ்விடம் விட்டு ,அகலத் தன்னைக்
காட்டி,அருள் காட்டி,இருள் போக்கி ,தாயான மேனியின் ஐயம் அகற்றி,தந்தையான
இமவான் மகிழ மேலோர் போற்ற,மேலோர் வாழும் கன்னியாகுடியில் மலைமகளை
மணந்து கொண்டாரே அதுவன்றோ மேன்மை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக