அறுவை என்னும் மருத்துவர் சொல் கேட்டு (28.616)
சேவடி தாங்கிச் செந்தூர் வரவிலையா?
பாவால் புகழ்ந்து பரங்குன்றக் --- காவலனை
நாவால் துதிக்க மறந்தேனா?நாய்மகன்
நோவுற்றேன் நற்கதி நீ.
பழனிப் படியில் பலகால் பணிந்தேன்:
கழனிக் கருணையான் கன்னி ---விழைந்தேன்
உழலும் உயிர்ப்பினை உன்னடி என்றேன்
கழுமர நன்னோயும் ஏன்>
குற்றம் பலப்பல கூடியே நின்றேனோ?
சுற்றச் சுகத்தைச் சூறையாடி ---விற்றேனோ?
கற்ற மறையைக் காசுக்கு அர்ப்பணித்து
பற்றையும் கொண்டேனோ?பார்.
செய்யாத செய்முறை செய்த பலனிதோ?
பொய்த்துப் புறம்கூறிப் பொல்லாத ---எய்திநான்
வையத்து வாழ்விழந்து வன்னோய் அடைந்தேனோ?
கையற்றேன் கந்தனே கா.
மருத்துவ ஆய்வின் பின்
காத்தருள் கந்தா!கதறிய சொல்கேட்டுக்
காத்தவா!காலமெலாம்நின்காலடி ---- ஏத்திடுவேன்:
பூத்தமலர்ப் பொன்மேனிப் புண்ணியா!போற்றிட
வார்த்தையில்லை வள்ளலே வாழ்.
சேவடி தாங்கிச் செந்தூர் வரவிலையா?
பாவால் புகழ்ந்து பரங்குன்றக் --- காவலனை
நாவால் துதிக்க மறந்தேனா?நாய்மகன்
நோவுற்றேன் நற்கதி நீ.
பழனிப் படியில் பலகால் பணிந்தேன்:
கழனிக் கருணையான் கன்னி ---விழைந்தேன்
உழலும் உயிர்ப்பினை உன்னடி என்றேன்
கழுமர நன்னோயும் ஏன்>
குற்றம் பலப்பல கூடியே நின்றேனோ?
சுற்றச் சுகத்தைச் சூறையாடி ---விற்றேனோ?
கற்ற மறையைக் காசுக்கு அர்ப்பணித்து
பற்றையும் கொண்டேனோ?பார்.
செய்யாத செய்முறை செய்த பலனிதோ?
பொய்த்துப் புறம்கூறிப் பொல்லாத ---எய்திநான்
வையத்து வாழ்விழந்து வன்னோய் அடைந்தேனோ?
கையற்றேன் கந்தனே கா.
மருத்துவ ஆய்வின் பின்
காத்தருள் கந்தா!கதறிய சொல்கேட்டுக்
காத்தவா!காலமெலாம்நின்காலடி ---- ஏத்திடுவேன்:
பூத்தமலர்ப் பொன்மேனிப் புண்ணியா!போற்றிட
வார்த்தையில்லை வள்ளலே வாழ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக