மதங்கி
எழு சீர் ஆசிரிய விருத்தம்
மேலான் மென்குடி முன்னவன் வாழூர்
மென்கர நல்வாள் மதங்கீர்!
வேல்விழி விரிகனி வழங்கி மயக்கினீர்!
வீழ்ந்தோர் பற்பலர் வியக்க
மால்தரு அமுதம் மதிகலை மாண்புடன்
மகிழ்சுகப் பார்வை வீசினீர்!
கால்தொடு காதல் கண்கொடை காட்டீரோ?
கைவேல் களைந்து இணைவீரே.
பொருள்
வீரமுடன் வாள் சுழற்றும் வீர மங்கையிடம் களி மகன் புலம்பல்.
மேலவனாயும்,மூவருக்கும் முன்னவனாயும் விளங்குகின்ற கைலாச நாதன்
வாழும் ஊராகிய கன்னியாகுடி வந்து மென்மையான கைகளில் வாள் சுழற்றும்
மதங்கியரே!வாள் சுழற்றும்கால் வேல்போன்ற விழிகளாலும்,கனிபோன்ற
கொங்கைகளாலும்.அழகை வழங்கி மயக்கினீர்!அவ்வழகில் மயங்கி வீழ்ந்தோர்
பற்பலர் ஆவர்.மயக்கம் தரும் இதழ் அமுதமானது காண்போர் அறிவைப் பெருமையுடன்
கலைத்தது:
இவ்வரிக்கு ....வேறு பொருள்...
திருமால் பாற்கடல் அமுதத்தை மாண்புடன் வழங்கி,நிலை வாழ்வு வழங்கியது போல
நீவிரும் இதழ் அமுதம் வழங்கி எங்களை வாழ வைப்பீர்!
மகிழ்ச்சி அளிக்கும் பார்வை வீசும் மதங்கியரே!தென்றல் தொடும் காதல் கொடையைக்
கண்களால்வீசுங்கள்! கை வாள் களைவீர்!காதலில் இணையுங்கள். என்று புலம்புகிறான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக