இரங்கல்
கட்டளைக் கலித்துறை
கன்னி இளமேனி மின்னல் கருமேகம் மாலைவாட்ட
அன்னத் துணையான் பொன்பூவில் அகமெலாம் இன்பூற,
இன்னும் இதய இடிபாடு எங்குமே அல்லலாம்.
கன்னியின் மன்னவ!காதலுறு பெண்மனம் காப்பாற்று.
பொருள்
கன்னியாகுடிக் கைலாச நாதன் மீது காதலுற்ற பெண்ணின் இரங்கல் வேண்டுகோள்.
இளம்பெண்ணின் மேனிபோன்ற மின்னல்கொண்ட மேகம் சூழ்ந்த கார்கால மாலை
வருத்தவும்,அன்னம் போன்ற இரதியின் துணைவன் மன்மதனது ஐவகை மலர்க் கணை
இன்பத்தோடு,வாட்டத்தையும் நல்க,இன்னும் ஊரார் தூற்றல்,நிலவு,தென்றல் போன்ற இடர்ப்பாடுகளும் எல்லா நிலையிலும் துன்பத்தை அளிக்க,உன்மீது மையலுற்ற பெண்ணின்
மனமறிந்து,அருள் புரிந்து,மாலை நல்கிக் கன்னியாகுடிக் கைலாச நாதனே!காப்பாற்றுவாய்.
என, தலைவி வேண்டுகிறாள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக