செவ்வாய், 14 ஜூன், 2016

தொடை முரண்

                       தொடை முரண்

           அறுசீர் ஆசிரிய விருத்தம்


செஞ்சிவ வெண்ணிதயம் கருங்கூந்தல் பசுமைக்கே:
         செயிர்ப்பும் பயிர்ப்புமாம்.
கொஞ்சிட மால்மகிழும்:கொடுங்கூற்  றழித்திடும்:
        கொல்லரவு குளிர்நிலா,
தஞ்சமளி செஞ்சடை:நஞ்சுண் கருங்கழுத்து:
        தண்முகத் தழற்கண்:
அஞ்சுபணி ஆறுதல்:ஏழிசை எண்குணம்
      ஆண்டவன் கன்னியானே!

                       பொருள்

பாடலின் அடிதோறும் வரும் சொற்கள் மாறுபட்ட கருத்துக்கள் கொண்டு
அமைவது தொடை முரண் ஆகும்.
        செம்மை குணச்சிவனின் வெண்மையான மனத்தில் கருமையான கூந்தல் கொண்ட பச்சை
மேனி கொண்ட கல்யாணி அம்மையே கருணைக் குணத்துடன் வீற்றிருக்கிறாள்:
    மோகினியாம் திருமால் மீது மயக்கமுற்றுக் கொஞ்சுவதும்,தவறு செய்த கூற்றுவனை அழிப்பதும்
அவர் இயல்பு:தஞ்சமடைந்த நிலவை மட்டுமல்லாது,கொடுமையான அரவினையும் கொண்ட செஞ்சடை:உலகோரைக் காக்க நஞ்சினை உண்டு நீலமான நீலகண்டன்:அருள்பொழியும் முகம்:
ஆயினும்  தீமை அழிக்கத் தழலாய் விளங்கும் முக்கண்:அஞ்சுவோர் பணிந்தால்.ஆறுதல் அளிப்பவன்:
ஏழிசை வல்லபன்:எட்டு குணங்களைக் கொண்டவன்:மூவேழ் உலகுக்கும் தலைவன்:அவனே
கன்னியாகுடியில் வீற்றிருக்கும் கைலாச நாதக் கடவுள்:அவனடி போற்றுவோம்.
                                     விளக்கம்
இப்பாடலில் செம்மை  x   வெண்மை.கருமை   x  பசுமை.செயிர்ப்பு   x   பயிர்ப்பு
         கொஞ்ச x கொடுமை. மகிழ x அழிக்க. கொல்லுதல் x குளிர்தல்.
          தஞ்சம் x நஞ்சு.செஞ்சடை x கருங்கழுத்து,தண்மை (குளிர்ச்சி)x தழல் (நெருப்பு)
          அஞ்சு X  ஆறு x  ஏழு x  எட்டு    போன்றவை முறையே நான்கடிகளிலும் வந்துள்ள தொடை
முரண்கள் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக