மடக்கு
எண்சீர் ஆசிரிய விருத்தம்
வாராது வந்தமுதருள் வான வராகமே!
வண்ணத்தாள் பதித்தாடும் வானவ ராகமே!
காராகக் கழனியில்காட்சிதண் தரங்கமே!
கால்மாறி ஆடியே கருணைதந்த அரங்கமே!
ஓராது சிவன்தனி முனிசெய்த அவமே!
ஓயாது போற்றுவோர் உள்ளம்செய் தவமே!
சீருயர்ச் செவ்வயல் கலம்விளை கன்னியே!
சீறலைச் செங்கடல் கலம்வலக் கன்னியே!
பொருள்
வந்த சொல் மீண்டும் மடக்கி வந்து வேறு வேறு பொருள் தருவது மடக்காகும்.
தாய்ப் பன்றிக் குருளைகளை ஈன்று,பின் இறந்துபட ,தாய்ப்பால் வேண்டிக் கண் திறவா
நிலையில் பன்றிக்குட்டிகள் முனகிக் கதறத் தானே,தாய்ப்பன்றியாக மாறி அக்குருளைகளைக்
காத்த சிவனே!இங்கு வான=விண்ணிலிருந்து வந்த.வராகமே=பன்றியாய் மாறிய கடவுளே.
எனப்பொருள் கொள்ள வேண்டும்.
சிற்றம்பலத்தில் ஆடும் ஆண்டவனின் ஆட்டத்திற்கு ஏற்பக் கலைவாணியும் மற்றைய
விண்ணவரும் பாடும் பாடலே! இங்கு வானவர்=விண்ணவர்கள் பாடும் ,ராகமே=ஏழிசைப் பாடலே, எனப்பொருள்
கார்மேக மழைநீர் தேங்கி நிற்கும் கழனியில் கலையாய்க் காட்சி தரும் அலைகளே! இங்கு
தண் =குளிர்ந்த, தரங்கமே =அலைகளே எனப்பொருள்
நடனம் ஆடக் கற்றுக்கொண்ட பாண்டியன், கால்வலி உணர்ந்து. நெடு யுகங்களாய் ஆடலரசன்
ஒரே காலில் நின்றபடி ஆடும் அற்புதம் போற்றினாலும், இறைவன் கால் துன்புறுமே, என நினைந்து, கால் மாறி ஆட வேண்டினான். பண்ண்டியனுக்குக் கருணைபுரியக் கால் மாற்றி ஆடிக் காண்பித்த வெள்ளியம்பலமே ! இங்கு தந்த=காட்சி தந்த அரங்கம்=வெள்ளியம்பலம்.
பிருங்கி முனிவர் சிவனை மட்டுமே வணங்குவார்;சக்தியை வணங்க மாட்டார். அவர் மீது
கோபமுற்ற அன்னை,அவர்முன் அர்ட்தநாரீஸ்வரராக இறைவன் உடலில் சரிபாதியாக நின்றார்.
முனிவரோ வண்டு உருவம் எடுத்து,இருவருக்கும் இடையே துளைத்து,சிவனை மட்டும் சுற்றி வந்தார்.
மேலும் சினந்த தேவி,அவர்சக்தி முழுவதையும் வெளியேற்றினார்.எலும்புக் கூடாய் நின்ற முனிவருக்கு கைக்கோல் கொடுத்துக் காத்தார்.இங்கு சிவனைத் தனியே முனிவர் வணங்கியது அவமே=பாவமே
இடைவிடாது போற்றுவோர் போற்றும் உள்ளத்தில் தவமாயும்,தவப்பொருளாயும் விளங்குபவனே!
செழுமை வாய்ந்த நன்செய் வயல்களில் நெல் மூட்டை,மூட்டையாய் விளையும் கன்னியாகுடியே.
இங்கு கலம் என்பது அளவைச்சொல்.நான்குபடி=ஒருமரக்கால் .பன்னிரண்டு மரக்கால் ஒருகலம் .
சீற்றமுடைய அலைகடலில் கப்பல்கள் வலம் வரும் கன்னியாகுடியே/இங்கு கலம் =கப்பல் . நாவாய்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக