இரங்கல்
எழு சீர் ஆசிரிய விருத்தம்
ஆடும் கூத்தன் அம்பலம் நாடினான்:
ஆருயிர் கூடவே சென்றதே!
நாடும் மன்மதன் நகைப்பது சுடுமே!
நல்லுடல் பசலை மின்னுமே!
வாடும் அடியவர் வாட்டம் களைபவன்,
வாடும் என்மனம் உணரானோ?
பாடும் பைந்தமிழ்க் கன்னியான் பார்வை
பட்டுநான் உய்யும்நாள் வாராதோ?
பொருள்
தலைவனைப் பிரிந்த தலைவி இரங்கிக் கூறுவது..
என்னோடாடிய கூத்தன் என்னை விட்டுவிட்டு ஆனந்த அம்பலத்தை நாடிச்
சென்று விட்டான்:அவனோடு என்னுயிரும் சென்று விட்டது:அவன் இல்லா மாலையில்
மன்மதன் என்னைப்பார்த்து நகைக்கிறான்:அச்சிரிப்பு என்னைச்சுடுகிறது:
பிரிவால் என் மேனிமுழுவதும் பசலை படர்ந்து மின்னுகிறது:துன்புறும் ஆன்மாக்களைக்
காத்து,வாட்டம் போக்குபவன் அவனைப் பிரிந்து வாடும் என் மனம் உணர மாட்டானோ?
தேவாரத் தீந்தமிழ் போற்றும் கன்னியாகுடிக் கைலாச நாதன் அருட்பார்வை என் மீது
பட்டு,நான் நல்லருள் பெறும் நாளும் வாராதோ?என ஏங்கிப் புலம்புகிறாள் தலைவி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக