தாளைப் பணிவோம்
நேரிசை வெண்பா
கண்ணானான் கண்ணுள் மணியானான் கார்குழல்
பெண்ணானான் பெற்றுவளர் தாயானான் ----மண்ணானான்
விண்ணானான் வேத நெறியானான் கன்னியான்
தண்கழல் தாளைப் பணி.
பொருள்
உலகோரின் கண் போன்றவன்:கருணை பொழியும் கண்மணி
அவன்:கருமையான கூந்தல் கொண்ட மலைமகளும் அவனே:
பெற்று வளர்க்கும் தாய் போல் உலக உயிர்களைக்
காப்பவன்:
மண்ணும் அவனே:விண்ணும் அவனே:இரண்டையும் இணைத்த
அண்ணாமலையான் அவன்:மாமறை காட்டும் நெறியே அவன்:
கன்னியாகுடியில் வீற்றிருக்கும் கைலாச நாதனின்
பெருமைகள்
பேசற்கரிய.அவனது குளிர் கருணை கொண்ட திருப்
பாதங்களை
வணங்கி உய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக