இடைச்சியார்
கட்டளைக் கலித்துறை
ஆள்பவர் காணின் அழகு மெருகூட்டும் சிற்றிடையும்
வாள்கண் வளமுலை வற்றா அமுதவாயும்,கொண்டுள்ளீர்!
தோளிடை சாய்ந்திடை தொட்டிடை நன்னிடைப்
பட்டிடைச்சீர்!
கோளிடைத் திங்களுடைக் கன்னியான் ஊரீர்! மனந்தாரீர்.
பொருள்
ஆண்டு அனுபவிக்கும் ஆண்மகன் உங்களைப்
பார்த்துவிட்டால்,அழகுக்கு
மெருகூட்டும் அழகுடைச் சிற்றிடையும்,வாள் போன்ற
கண்களும்,பெருத்த
கொங்கைகளும்,குறையாமல் அமுது வழங்கும்
வாயும்,கொண்ட இடைச்சியரே!எமது தோளிலே சாயந்து நல்ல,பட்டுபோன்ற இடை தீண்டுமாறு
நில்லுங்கள் இடைச்சியரே.கோள்களில் ஒன்றான
திங்களை அணிந்த கைலாசநாதன் வீற்றிருக்கும் கன்னியாகுடியில் வாழும் இடைச்சியரே!
மனம் திறந்து எம்மோடு காதல் கொள்ளும் ,என ஒரு
குடிமகன்
புலம்புகிறான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக