வியாழன், 16 ஜூன், 2016

ஆட்கொள்ளும் வித்தகன்

             ஆட்கொள்ளும் வித்தகன்

                    நேரிசை வெண்பா

தத்துவ  முத்தமிழே!தண்ணளி முக்கண்ணா!
முத்தணி மோகன மாமுனியே!----வித்தக!
பித்தனெனப்  பாடியோன்,பேயாகிப் போற்றியோள்
அத்தனே!அங்கன்னி ஆள்.

                                  பொருள்
 இயல்,இசை,நாடகத் தமிழின் தத்தவமே!கருணை பொழியும் மூன்று கண்களைக்
கொண்டவனே!முத்து போன்ற மலைமகளை ஒருபாகமாகக் கொண்ட பற்றற்ற
யோக தட்சிணா மூர்த்தியே!எல்லாம் வல்ல சித்தனே! பித்தா,எனப்பாடிய சுந்தரருக்கும்,
பேயுரு கொண்டும் கைலையைத் தலையால் நடந்துவந்து போற்றிய காரைக்கால்
அம்மையாருக்கும் முத்தி அளித்தவனே!அழகிய கன்னியாகுடியில் வீற்றிருக்கும்
தலைவனே!எம்மை ஆள்கொள்வாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக