கருணைக் கடல் காத்திடுவான்
நேரிசை ஆசிரியப்பா
மங்கை அங்கம்:சங்கொலிக் கங்கை
தங்கத் தரங்கம் தாங்கு செஞ்சடை:
பங்கத் திங்கள் கொங்கவிழ் கொன்றை:
கங்குல் தங்காச் செந்தழல் செங்கண்
கங்கணச்செந்தீ,செம்மான் செங்கரம்
பங்கயத் தங்கிடம் கங்குலோன் தங்கிடம்
சங்கைகள் தங்காப் பொங்கொளிர் சங்கரன்
கொங்குதேர் சங்கச் செந்தமிழ் அங்கமே:
நங்கை என்பினில் பொங்குயிர் தந்தவன்:
தங்கச் சுங்கமாய்த் தண்படி தந்தவன்:
செங்கல் செங்கடல் வங்கமாம் தங்கருள்:
மங்களச் செங்கயல் மந்திரப் புன்னகை
தங்கு நெஞ்சத் தண்ணருள் பொங்கும்:
அங்குச ஐங்கரன் பைங்கனி நுண்திறன்
சங்கொலிச் சங்கரிச் சண்முக சௌந்தர்யம்
பிங்களன் பிஞ்ஞகன் புன்கூர் கன்னியான்
எங்கும் பங்கயன்:எங்கும் பைங்கணன்:
அங்கழல் நந்தலை ஏந்தின்
செங்கடல் செங்கருணை சிந்துவான் செஞ்சிவமே.
பொருள்
மலைமகளை ஒரு பாகமாய்க் கொண்டவன்:கங்கையைச் சடையிலே தாங்கியவன்:
மேலும்,பிறைச்சந்திரன் சூடியவன்:கொன்றை மலரும் அணிந்தவன்:தீமைகளைப்
பொசுக்கும் நெற்றிக்கண் உடையவன்:கங்கணம்.நெருப்பு,மான்,ஏந்திய அபயக்
கரங்களோடு திகழ்பவன்:அழகிய சேவடிக்குக் கீழே அறியாமை என்னும் முயலகனை
மிதித்தபடி உலகோருக்கு நன்ஞானம் வழங்கும் தட்சிணா மூர்த்தி:கொங்குதேர்,
எனத்தொடங்கும் பாடல் இயற்றித் தமிழ்ச்சங்கப் புலவன் ஆனவன்:பூம்பாவை ,என்னும்
பெண்ணின் உயிரை,பதிகம் பாடிய திரு ஞான சம்பந்தருக்காக.பானைக்குள் வைத்துக்
காக்கப்பட்ட எலும்புக் கூட்டின் வழியே அப்பெண்ணிற்குப் புத்துயிர் வழங்கியவன்:
சுந்தரரின் செல்வநிலை ஓங்கப்
பொற்கட்டிகளைக் குளக்கரைப் படியில் வைத்தவன்:கல்லைக்கட்டிக் கடலிலே தள்ளிய
சமண சமயத்தவர் வியக்கும் படி,நமச்சிவாயப் பதிகம் பாடிய திருநாவுக்கரசரின்பேருயிர்
காக்கக் கல்லையே தெப்பமாக மாற்றியவன்:ஒருபாகம் உடையாளின் கருணை கூர்ந்த
மனத்தினை உடையவன்:உலகே,தாய் தந்தையர் எனக்கூறி,அவர்களைச் சுற்றி வந்து
கனியைப் பெற்ற விநாயகன்,சூரபன்மனை அழித்து வீரம் விளைத்த வேலன்,ஆகிய இருவரின்
தந்தை:அழகே உருவானவன்,குற்றமில்லாத ஞான ஒளி:நந்தனார் என்ற அடியவருக்காக நந்தியை
மறைக்காதிருக்கச் சொன்ன,திருப்புன்கூர் என்னும் ஊருக்கு அருகே அமைந்த கன்னியாகுடியில்
வீற்றிருப்பவன்:எங்கும் நிறைந்த தாமரை அடிகளைக் கொண்டவன்:எல்லோரையும் காக்கும்
அருள்பொழியும் கண்கள் உடையவன்:இப்படிப் பட்ட கைலாச நாதனின் கருணைக் கழல்களை
வணங்கிப் போற்றினால்,கடலளவு கருணையை நம்மீது பொழிந்து நம்மை ஈடேற்றுவான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக