கட்டளைக் கலித்துறை
நிலையாத் தளையில் நிலைத்தபின் நீங்காப் பசைநசையால்
வலைபடு மீனாய் வளைசுகம் வாட்ட வசைமிசைவீழ்
அலைநீர்த் துரும்பாம் அலைபடு மக்கள் அறவழிகாண்
நிலையினை நல்கிட நின்னடி தொழுதோம் கைலைநாத!
பொருள்
நிலையற்ற இவ்வுலக வாழ்வென்னும் சிக்கலில் சிக்கி,நீங்காத ஆசையும்,பிடிப்பும்
கொண்டு,வலையில் சிக்கிய மீன் போல.மங்கைகளின் காம வலையில் சிக்குற்று,
வாட்டமும்,வசையும் கொண்ட வாழ்க்கையில் சிக்கி,அலை கடல் துரும்பாய், துன்பத்தில்
தவிக்கும் ஆன்மாக்கள் நல்வழி காண,நல்லறம் பேண நேரான உயரிய நிலையைக்
காட்டி அருளிடும் உமது திருவடிகளைத் தொழுகின்றோம்:கன்னியாகுடிக் கைலாச நாதனே!
எம்மை ஏற்றுப் பொன்னடி காட்டி அருள்வீராக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக