செவ்வாய், 31 மே, 2016

மடல்

                    மடல்

             அறு சீர் ஆசிரிய விருத்தம்

இதமளி இதழ்சுவை இலைமறை இனித்திட,
               இருள்மன வெறுப்புடை
மதனவன் துணையுடை மதிமுக மங்கைகாள்!
               மதன்செயல் பொடித்தவன்
பதமணை  அடியவன் உதையமன் புரந்தவன்
              பதியதாம் கனிக்குடி
மதில்மனை மலர்வன நடுவினில் மதியெழ
             மடல்தொடு நிலையுளேன்.

                                     பொருள்
 காதல் கை கூடாத நிலையில் மடலேறுதல் என்பது அகப்பொருள் மரபு.
     நேற்றுவரை என்னோடு சுனை ஆடியும்,சோலை ஆடியும் இனிய அனுபவங்களை வழங்கிய தலைவி,இன்று ஏனோ வெறுப்பினைக்
காட்டுகிறாள்.இந்நிலை நீடிக்குமாயின்,மன்மதனின் துணையாகி,
நிலவன்ன முகம் கொண்ட பெண்களே! மன்மதனைப் பொடியாக்கியவனும்
தனது கால்களைப் பற்றிக்கொண்ட மார்கண்டேயனுக்காக கூற்றுவனைக்
காலால் உதைத்து,அடியவனைக் காத்தவனும் வீற்றுள்ள கன்னியாகுடி
நகரின் மனைகளும்,மலர்ச்சோலைகளும் சூழ்ந்துள்ள பொதுவிடத்தில்
மடல் ஏறிடுவேன்,அஞ்ச மாட்டேன்,எனச் சூளுரைக்கிறான் தலைவன்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக