செவ்வாய், 31 மே, 2016

இதுவோ கன்னி?

             இதுவோ கன்னி?

             கலிவிருத்தம்

தொழுதவர் காக்கும் துயர்தவிர் தூயவன் சால்பாமோ?
மழுவுடை மாதவன் மனமதும் கூர்மை கொளலாமோ?
அழுமுளக் கன்னியின் ஆழ்மனம் அறியாப் புகழ்முறையோ?
செழுஞ்சுடர்ச்  செஞ்சிவன் சீர்மிகு கன்னி இதுதானோ?

                                  பொருள்
  கன்னியாகுடிக் கைலாச நாதன் மீது,காதலுற்ற தலைவி,அவனது
கண்ணளி கிடைக்காது புலம்பும் மொழி.
    தன்னை வணங்குவோர் நலம் காத்துத் துயர் போக்கும் தூயவன் என்மீது
கருணை கொள்ளாதது சால்பாகுமோ?கையிலே கூர்மையான மழுப்படை
வைத்திருப்பதால் அவன் மனமும் கொடுமை உற்றதாக மாறிவிட்டதோ?
அவனையே நினைந்து வருந்தும் உள்ளம் கொண்ட இளம்பெண்ணின்
காதல்மனம் அறியாத அவனைப் புகழ்தல் முறையாகுமோ?
சுடரொளியால் கருணையால் சிவன் எனப்பெயர் பெற்றுச் சீர்மை கொண்டவன் வாழும் கன்னியாகுடி இது தானோ?ஆயினும் என் காதலை
அவர் இன்னும் ஏன் ஏற்கவில்லை?எனப் புலம்புகிறாள் தலைவி.
 பெற்ற 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக