கட்டளைக் கலித்துறை
மங்களச் செல்வி மனமஞ்சி மார்பு தழுவியக்கால்
கொங்கைக் குறியும்,சங்குவளைக் கீற்றும் கொழுதழும்பாம்:
செங்கண் மலர்க்கண்,சீரரக்கன் வீணை செழுங்குளிர்மை:
சங்கத் தமிழ்க்கன்னிக் காவலன் தாளைத் தொழுதிடுவோம்.
பொருள்
காஞ்சிக் கம்பையாற்றினில் மணல் வடிவச் சிவலிங்கம் அமைத்துப் பூஜித்தாள் அம்மை.அம்மையைச்
சோதிக்க விரும்பிய இறைவன்,ஆற்றில் வெள்ளத்தை உருவாக்கினார்:ஓடிவரும் நீர் ஈசன் உருக் கொண்ட மணல் உருவை அழித்துவிடுமோ,என்றஞ்சி,அதனை அன்னை மார்புறத் தழுவித் தடுக்க
முனைகிறாள்:அக்காலை அன்னையின் முலைக்குறியும் கை வளைக் குறியும் இறைவன் மார்பிலே பதிந்தது:மகிழ்ந்த ஈசனின் மார்பில் மாறா வடுவாய் அமைந்தது:
ஆயிரத்தெட்டு தாமரை மலரால் திருமால் சிவபெருமானை அர்ச்சித்த காலை,அவரையும் சோதிக்க விரும்பிய அண்ணல் ஒரு மலரை மறைத்திட,ஆயிரத்தெட்டாவது மலரைக் காணாத திருமால் தாமரைபோன்ற தன கண்ணையே மலராக்கி அர்ச்சிக்கிறார்:ஈசன் மகிழ்ந்து அவருக்குத்
தனது சக்கரப் படையை அளிக்கிறார்:
கைலை மலையையே தன் நாட்டிற்குப் பெயர்த்தெடுத்துச் செல்ல முனைகிறான் இராவணன்"
மலையைத் தூக்க முற்படும்பொழுது,தனது கால் கட்டை விரலால் மலையை அழுத்தினார் சிவன்.
இடையிலே சிக்குண்ட இராவணன் நாரதர் சொல் கேட்டுத் தனது உடல் நரம்புகளால் வீணையை
உருவாக்கி,சாம கானம் பாடுகிறான்:மகிழ்ந்த ஈசன் அவனுக்கு ஆத்மலிங்கத்தை அளிக்கிறார்.
இத்தகைய சிறப்புவாய்ந்த கைலாச நாதர் தமிழ் போற்றும் கன்னியாகுடியில் வீற்றுள்ளார்.
அவரது மலரடிகளைப் போற்றி வணங்குவோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக