செவிலி இரங்கல்
கொச்சகக் கலிப்பா
காட்டுக கன்னியூர் நாதனே!கண்கருணை.
வாட்டும் விரகம் வளர்நிலா சுட்டெரிக்கும்
மூட்டிய முக்கண் முதுகாதல் முத்தியதே.
ஈட்டியான் பற்றுமுன் ஈந்திடு நித்தியமே.
பொருள்
தலைவியின் காதல் நோய் கண்டு,தலைவனிடம் (இறைவனிடம்)செவிலி
அவளைக் காக்குமாறு வேண்டுதல்.
கன்னியாகுடிக் கைலாசனாதனே!உனது கண்களில் கருணை காட்டுவாய்.உன்மீது
கோட்ட காதலால்,உன் பிரிவைத் தாள முடியாது,தவிக்கும் பெண்ணை,வெண்ணிலா வேறு
சுட்டெரிக்கிறது.மனதிலே உம்மீது கொண்ட பெருங்காதல் முத்திற்று .அதனால் உயிர் விடும்
அளவு துயர் அடையும் பெண்ணை,இயமன் வந்து பற்றிச் செல்லும் முன் கருணை காட்டிக்
காத்து ஏற்றிடுவாய்.என செவிலி வேண்டிக் கூறுகிறாள்.
சிற்றின்ப நோக்கே பேரின்ப வாழ்வுக்கு வழி வகுக்கும்.இங்கு காதல் முத்தியில்
நித்தியம் வேண்டும் நிலையம் அதையே விளக்குகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக