செவ்வாய், 10 மே, 2016

தலைவி இரங்கல்

                          தலைவி இரங்கல்

                 எண்சீர் ஆசிரிய விருத்தம்

நித்தில முத்தணி மத்திமச் சுழல்விரி
    நீளிரு மாங்கனி நவையிதழ்த் தலைவி,
மத்திடு தயிர்போல் மனமெலாம் கலங்கி,
    மன்னன் மதிமுகம் மனதில் நிறுத்தி,
அத்தா!அருந்தோள் மலைந்து அணைத்து
      அகமகிழ் பெருசுகம் அளித்தே அருளவாய்.
இத்திறம் இல்லையேல் இனிய வில்லாளன்
     என்னுயிர் பறிப்பான்;கன்னியின் காவலனே!

                                பொருள்
அழகிய முத்து அணிகளும்,அழகிய தொப்புளும்,மாங்கனிபோல் கொங்கைகளும்,
தேன்போல் இனிக்கும் இதழ்களும்,கொண்ட தலைவி,மன்னனாம் கன்னியாகுடிக்
கைலாச நாதனிடம் மனதைப் பறிகொடுத்துவிட்டு,மத்தால் கடையப் படும் தயிர்போல்
சுழன்று,கலங்கித் தவிக்கிறாள்.அவள் மனம் இறைவனிடம் இறைவா!உன் அருமைத்
தோள் என்னை அணைக்கட்டும்;ஆரத்தழுவட்டும்;என்மனம் விரும்பும் ஆழ் சுகத்தை அளிக்கட்டும்;
அப்படி நீ அருள் காட்டவில்லைஎனில் காமன் தன வில்லால் என்னுயிர் பறித்து விடுவான்.
என்மீது காதல் கருணை காட்டி அருள்வாய்,கன்னியாகுடிக் காவலனே!என இரங்கிப்
புலம்புகிறாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக