வழி காட்டும் வள்ளல்
அறுசீர் ஆசிரிய விருத்தம்
வான்மழை வளரிடி வண்ணக் கொடிமின்,
வடிவுடை உருவாகி,
மான்மழு மலர்த்தீ மாவுயிர் அபயம்,
மாமறைத் துணையாகித்
தேன்மொழி பாகம் திகழ்மனவடுவுடன்
திகம்பர வடிவாகி
ஊனுயிர் உறவாம் உயரூர் உறுசிவன்
உலகோர் வழிகாட்டி.
பொருள்
மேகம்போல் கருணை,இடிபோல் வீரம்,மின்னல் போல் அருள் என்னும் உயரிய வடிவம்;
கரட்டுக்குரல் மானும்,மழுப்படையும்,மலர்போன்ற தீயும்,அபயமளி அன்பும் கொண்ட
மாமறைகளைத்துணையாக்கும் கரங்கள்;ஒருபாகம் மலைமகள்;ஆங்கு தென்படும்
வலை,முலைக்குறிகள்;ஆயினும்,பற்றற்ற தோற்றம்;உலக ஆன்மாக்களுக்கெல்லாம்
உறவாகியும் விளங்கும்,கன்னியாகுடிக் கைலாசநாதன் உலக ஆன்மாக்களுக்கு
வழிகாட்டியாய் விளங்குகிறான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக