செவ்வாய், 3 மே, 2016

தழை

                         தழை

             கட்டளைக் கலித்துறை

பதியெனில் கன்னியே பண்பாளன் கன்னியான் கொண்டகாதல் 
மதியாய் மனமுற்ற மங்கையே!மாசிலான் மங்கைபாகன் 
ததியுறு மத்திற் சுழலும் தவிமனம் மாற்றிடவே 
மதிவெண் மலர்த்தழை தந்தனன்;மாலையால்  மன்னுகநீ.

                                  பொருள் 
அகப்பொருள் அமைப்பில் தழையேற்பித்தல் என்னும் துறை,தலைவனிடமிருந்து பெரும் 
மலரைத் தழையைத் தலைவியின் துயர் தீர்க்கும் வாயிலாகப் பிறப்பது.
       ஊரெனில் கன்னியாகுடியே;தலைவன் கன்னிவாழ் கைலாசநாதனே எனக் காதல் கொண்டு 
திகழும் தலைவியே!மாசு இல்லாதவனும்,பெண்ணை ஒரு பாகம் கொண்டவனுமாகிய 
தலைவன்,தயிர் கடையுங்கால் சுழலும் மத்து போல அலைபாயும்,உன் மனத்துயரைப் 
போக்க,வெண்மை நிறம் கொண்ட மனமுடை மலராடையை,தான் அணிந்த மலர்த்தழையை 
உனக்காகத் தந்துள்ளான்.அதனை ஏற்று மகிழ்ச்சிக் கடலில் திளைப்பாயாக,என்று கூறிய 
தோழி தழையை தலைவியிடம் அளிக்கிறாள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக