ஊர்
சந்தக் கலி விருத்தம்
கனிதருசுவை கதிதருநலம் கவுணியனருள் பாட்டு ,
இனிநனிசுகப் பொழில் இடநிலத்தலை மனமகிழொளிச் செவ்வாய்,
கனியெழுவரும் கரமலருடன் சிரம்தொழுதுயர் கன்னி
மணிதவழ்நதி பவழமெனவே வளம்பலதரு பதியே.
பொருள்
கன்னியாகுடி என்னும் ஊரின் பெருமை பேசப்படுகிறது.கனிபோல் இனிக்கும் சுவையும்,
சிவகதி அடைவதற்கான நல்ல வழிமுறைகளும்,கொண்ட தேவாரப் பாடல்களைப் பாடிய
திரு ஞானசம்பந்தர் தோன்றிய சீர்காழி என்னும் ஊரின் அருகே அமைந்தது:இனிமையான வாழ்வின்
அடித்தளமான நிலத்தின் (பூமி)தலைமைக் கோளான செவ்வாய் அருள்புரியும் வைத்தீஸ்வரன்
கோயில் அருகே அமைந்தது:ஏழு கன்னியர்களும்,மலர் தொடுத்துப்போற்றிய பெருமை வாய்ந்தது:
முத்துக்களும் பவளங்களும் நிறைந்து ஓடும் "பழவாற்றின்"கரையில் அமைந்தது ஆகிய சிறப்புக்களைக் கொண்டு விளங்கும் ஊர் கன்னியாகுடி ஆகும்.
கனியெழுவரும் ..........கன்னி என்பதன் இடைக்குறை.... கனி .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக