ஞாயிறு, 15 மே, 2016

கைலாசநாதன் அருள்

                          கைலாசநாதன் அருள்

                              சந்த விருத்தம்

கனிவிழுந்தெனக் கனல்மணல்துடை  கடுவனும்,களி கொடுமந்தியும்,
நனியுணவிது நலமடைந்திடு,பலமளித்திடு மதுஇதுவெனக்
கனிக்குடிதனின் அரும்பதியவர் அருள்மிகுசிவன் அவனடிபணி,
பிணிபலகழி   தனிநகரிது துணையருள்தரு  கயிலைமணியே.

                                        பொருள்
கனிந்தகனி மரத்திலிருந்து விழ,அதனைப் பொறுக்கிய ஆண்குரங்கு,கனியில் ஒட்டியிருக்கும் சுடும் மணலினை வாயால் ஊதுவதைப் பார்த்த பென்குரங்கும்.அதனோடு சேர்ந்து மகிழ்ச்சியுற்று,
இந்த வெய்யில் காலத்தில் நமக்குக் கிடைத்த நல்ல உணவு;நமக்கு நலமும் பலமும் தரும்,எனக்
குதிக்கின்ற கன்னியாகுடியின் தலைவர்,அருள்பொழியும் சிவன்:அவரடி பணிந்து போற்றினால் இம்மை மறுமை நோய்களைத் தீர்க்க வல்லான் அவன் வீற்றிருக்கும் நகர்;நமக்குத் துணையாகி வந்து அருள் பொழியும் கடவுள் கைலாசனாத்ன் ஆவார்.

                               விளக்கம்
கனிக்குடி ........" கன்னிக்குடி "என்பதன் இடைக்குறை    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக