வெள்ளி, 13 மே, 2016

வெறிவிலக்கு

                                    வெறிவிலக்கு

                             கட்டளைக்கலித்துறை

சிந்துவாம்  செந்தமிழ்ப் பாடல் பணிதல்  தவிர்த்திடுங்கள்;
அந்திசூழ்  சந்திரன் முந்தி வருதல்  அகற்றிடுங்கள்
சிந்தை மயக்கும் இளவேனில் தென்றல் கலைத்திடுங்கள்:
எந்தன் மனநோய் இனிக்கும் மருந்து இறைகனியே.

                                    பொருள்
காதல்நோய் உற்ற தலைவிக்கு அவள் மனம் புரியாமல் பல்வேறு சடங்குகள் செய்யத்
தலைவியோ,இவற்றை விலக்குங்கள்,என்மனம் கவர்ந்தவனின் மாலை வாங்கி வாருங்கள் ,என்பது
வெறி விளக்கு ஆகும்.
     என்மன நோய்தனைப் போக்க முற்படுபவர்களே!சிந்து போற்றும் செந்தமிழ் மேற்கோள்
காட்டி உபதேசம் செய்வதை நிறுத்துங்கள்: எனக்கு முன்னாள் மாலை நன்னிலவு தோன்றாமல்
பார்த்துக் கொள்ளுங்கள்:என்னை நோக அடிக்கும் இளவேனில் காலத் தென்றல் வீசுவதைத் தடை செய்யுங்கள்:எல்லாவற்றிற்கும் மேலாய்,கன்னியாகுடி சென்று அங்கு வீற்றிருக்கும் கைலாச
நாதனின் மாலை வாங்கி வாருங்கள்:அதுவே என் நோய் தீர்க்கும் மருந்தாகும்.
                                                          விளக்கம்
                            இறை கனியே ....என்பதில் கன்னி...கனி   என இடைக்குறையாக வந்துள்ளது.
இனிக்கும் இறை கைலாச நாதன்....எனவும் பொருள் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக