தூது..... மேகம்
நேரிசை வெண்பா
ஏகாக் கருமையில் ஏந்திடும் வெண்மையே!
வேகும் வெறிமனத்தாள்,கன்னிநாதன் ----பாகுமனம்
மோகமுற்று நோகிறாள் மெல்லசொல்லி மாலையைத்
தாகமழை போலவாங்கி வா.
பொருள்
தலைவன் மீது கொண்ட காதலைத் தலைவி,தூது வாயிலாக வெளிப்படுத்துவது
கருமை நீங்காத கனத்த மழை மேகமே!உன் கருமைக்குள் நல்ல மனம் என்ற
வெண்ணிறத்தையும் மறைத்து வைத்துள்ள மேகமே!கன்னியாகுடியில் வாழும்
கைலாச நாதன் மீது மாறாக் காதல் கொண்டு ,அந்நோயால் வெந்து நிற்கும் மனத்தை உடையவள்
நான்.கருணை பொருந்திய கன்னி நாதன் மீது காதலுற்று அவரின் கண் பார்வைக்கு எங்கும்
என்னிலையை இடி இடித்து ஊர் கூட்டாமல்,மென்மையான மின்னல்,மெல்லிடிஆக
எடுத்துரைத்து,அவரணிந்த மாலையை,என் வெம்மை நோய் தீர்க்கும் மழை அன்ன மாலையை
வாங்கி வா!என்று மேகத்தைத் தூது அனுப்புகிறாள் தலைவி.
வெண்மையாம் கருணையை மறைத்து வைத்திருப்பதால் எனக்கும் இரங்கி அருள்வாய்,என்பதும்,
தாகம் தீர்க்கும் மழையைக் கொண்டவன் நீ அதனால் என் காதல் தாகத்தையும் தீர்த்து வைப்பாய்
என்பதும்மனத்தில் நிறுத்தித் தலைவி மேகத்தைத் தூதுப் பொருள் ஆக்குகிறாள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக