நேரிசை வெண்பா
செய்தவச் சின்முத்ரைச் சீராலங் காட்டிலோ?
செய்தவர் கூடிடும் கைலையோ?----செய்தவத்தால்
மெய்யரைக் கொண்டவள் செங்கோடோ? மென்கருணை
மெய்யர்வாழ் கன்னியோ சொல்.
பொருள்
தவம் ஆற்றும் கோலத்தில்,யோக நித்திரையில்,சின்முத்திரை பொதிந்த கரத்துடன்
ஆலால மரத்தடிச் சீடர்களுடன் அமர்ந்த தட்சிணா மூர்த்தியாய் அமர்ந்த திரு ஆலங்காடோ ,
ஆற்றிய அருந்தவப் பயனாய் முனிவர்களும்,சான்றோரும் குழுமிப் போற்றி வழிபடும்
கைலாச மலையோ?தவமும்,பணிவிடையும்,பண்புடைச் செயலும் ஆற்றி,அதன் பயனாக,
இறைவன் மேனியில் பாகம் கொண்டவளோடு காட்சி தரும் திருச்செங்கோடோ?
அடியவருக்கு அருள் கருணை பொழியும் மெய்யராய் விளங்கிக் கைலாச நாதர் எனத்
திகழும் கன்னியாகுடியோ?எங்கிருப்பார் ஈசன்?எங்கும் எதிலும்,எப்பொழுதும்,நிறைந்து
நின்று அருள் பாலிப்பவரே பரம்பொருளாம் சிவபெருமான்.
விளக்கம்
மெய்யரை ......ஒருபொருள் உண்மையான ஈசன்.மெய்+அரை எனப்பிரித்தால் ...உடலில் பாதி
எனப் பொருள் கொள்க

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக